Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Tuesday, July 28, 2020

கல்வித்துறையில் குளறுபடி சிஇஓ, டிஇஓ அதிகாரம் அதிரடியாக பறிப்பு?: பள்ளிக் கல்வித்துறை முடிவு


சென்னை: மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அதிகாரிகள் ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தை பறிக்க பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது. தமிழகத்தில் 32 மாவட்டங்களில் முன்பு இருந்த மெட்ரிக்குலேஷன் ஆய்வாளர்கள் 17, ஆங்கிலோ இந்தியன் பள்ளிகள் ஆய்வாளர் 1, 32 மாவட்ட தொடக்க கல்வி அதிகாரிகள் 32 பேர் உள்பட மொத்தம் 68 கல்வி அதிகாரிகள் செயல்பட்டு வந்தனர். இந்த அதிகாரிகளின் பதவி மற்றும் அதிகாரம் தொடர்பாக சில திருத்தங்களை பள்ளிக் கல்வித்துறை செய்து 2018ல் ஒரு அரசாணை வெளியிட்டது.

அதன்படி மேற்கண்ட கல்வி அதிகாரிகள் 68 பேர் என்பதை விரிவுபடுத்தி மாநிலம் முழுவதும் 120 பேர் நியமிக்கப்பட்டனர். அவர்களுக்கு கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டது. இதன்படி, அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அதிகாரிகள் அதிக அதிகாரம் பெற்றவர்களாக மாறத் தொடங்கினர். இதனால் பள்ளிக்கல்வித்துறையில் உள்ள இயக்குநர்களுக்கு அதிகாரம் இல்லாமல் போனது. ஒரு ஆசிரியரை மாற்ற வேண்டும் என்றாலும் அந்த மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரியைத்தான் இயக்குநர்கள் எதிர்பார்த்து இருக்க வேண்டும் என்ற நிலை உருவானது.

இதனால் பள்ளிக் கல்வித்துறையில் பெரும் குழப்பங்கள் ஏற்பட்டு கடந்த 3 ஆண்டுகளாக பள்ளிக் கல்வித்துறை திண்டாட்டத்துக்கு வந்துவிட்டது. மேலும் கடந்த 3 ஆண்டுகளில் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை வெகுவாக குறைந்து பள்ளியில் படித்த மாணவர்கள் அதிக அளவில் வெளியேறினர். தேர்விலும் மாணவர்கள் குறைவாகவே பங்கேற்றனர். ஆசிரியர்கள் மாறுதல்கள், அவர்கள் மீது எடுத்த நடவடிக்கைகளால் மனம் நொந்தனர். இந்நிலையில், பள்ளிக்கல்வித்துறை கொண்டு வந்த மேற்கண்ட 101 அரசாணையில் மீண்டும் திருத்தம் செய்து, மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு வழங்கிய அதிகாரங்களை திரும்பப் பெற பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது. இதற்கான அறிவிப்பு மற்றும் அரசாணை விரைவில் வெளியாக உள்ளது.

No comments:

Post a Comment