ராமநாதபுரம் மாவட்டம் விளையாட்டு, கலை-பண்பாட்டு பயிற்சியாளர் நலச்சங்க தலைவர் செந்தில்குமார், செயலாளர் கண்ணன் கூறியதாவது:அரசு உதவிபெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளில் பகுதிநேரமாக சிலம்பம், கராத்தே, ஓவியம், பரதநாட்டியம், ஸ்கேட்டிங், வில் வித்தை, கீபோர்டு, டிரம்ஸ், செஸ், ஆர்ட் அன் கிராப்ட், மேற்கத்திய நடனம், கிராமியப்பாடல் போன்ற கலைகளை மாணவர்களுக்கு கற்றுத்தருகிறோம்.கொரோனா பரவலால் பள்ளிகள் திறக்கப்படாததால் 3 மாதமாக சம்பளம் வழங்கவில்லை. இதனால் மிகவும் சிரமப்படுகிறோம், பள்ளிநிர்வாகம் பகுதிநேர ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்க வேண்டும், எனக்கூறினர். சங்க துணைச்செயலாளர் சுகந்தி உடனிருந்தார்.
Monday, July 20, 2020
பகுதிநேர ஆசிரியர்களுக்கும்சம்பளம் வழங்க கோரிக்கை
Tags
கல்விச்செய்திகள்
கல்விச்செய்திகள்
Tags
கல்விச்செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment