Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Saturday, July 25, 2020

மூலநோய், உடல் சூடு முதலானவற்றைக் குணமாக்கும் தொட்டாச்சிணுங்கி


தொட்டாச்சிணுங்கி..... Mimosa Pudica என்ற தாவரவியல் பெயர் கொண்ட தெய்வீக மூலிகை தாவரங்களுக்கும் உணர்வு உண்டு என்பதை உலகுக்கு உணர்த்தியது. விரல் பட்டதும் சட்டெனத் தன்னை உள்ளிழுத்துக் கொள்ளும் இந்தத் தாவரத்தை எல்லோரும் பார்த்திருப்போம். உணர்வு மட்டும் அல்ல. உன்னதமான மருத்துவக் குணங்களும் இந்த மூலிகைச் செடிக்கு உண்டு.... என்றார் சித்தா கிளினிக்..சித்த மருத்துவர்..Dr., தி. தங்கரதி.BSMS. MBA. MA(yoga)..! இதனை ஆங்கிலத்தில் 'Touch-me-not' என்றும் சொல்வார்கள். 'நமஸ்காரி' என்று அழைக்கப்படும் இந்த மூலிகை காந்த சக்தி உடையது. வன்னிமரம் போல் தெய்வ சக்தி உடைய மூலிகை என்பதால் துளசி போல வீட்டில் வைக்கலாம். இதனை தொடுகின்ற போது அதனுடைய சக்தி நமக்குள் மின்சாரம் போல் பாயும்.
உடல் எடையைக் குறைக்கும், மலச்சிக்கலைத் தடுக்கும் - நெய்பண்புகள் : இனிப்பு, துவர்ப்பு, கசப்பு ஆகிய சுவைகளைக் கொண்டது. உடல் தேற்றி செய்கை உடையது. இலைச்சாறு, புண்களைக் குணமாக்கும், அதிக மூத்திரத்தைக் கட்டுப்படுத்தும், காமம் பெருக்கும், மூலநோய் மற்றும் வாதத்தடிப்பைக் குணமாக்கும். மருத்துவப் பயன்கள்: 

• தொட்டா சிணுங்கி வேரையும், இலையையும் சம அளவில் எடுத்து உலர்த்தி துணியில் சலித்து பசும்பாலில் கலந்து குடிக்க மூலச் சூடு குறையும்.
பலவகை நோய்களை விரட்டும் பப்பாளி பழம்!
• உடல் சூடு அதிகமானால் சிறுநீர்த் தாரையில் எரிச்சல் ஏற்படும். இதற்கு இதன் இலையை அரைத்து 5- 6 நாள் 1 கிராம் அளவு காலையில், தயிரில் கலந்து சாப்பிட வேண்டும். சிறுநீர் எரிச்சல் குணமாகும். 

• கை, கால் மூட்டு வீக்கம், ஒவ்வாமை, தோல் தடிப்புகள் குணமாக, தொட்டா சிணுங்கி இலையை அரைத்து பசையாக்கி பாதிக்கப்பட்ட இடத்தில் தடவ வேண்டும்.

• வயிற்றுக்கடுப்பு தீர ஒரு கையளவு தொட்டா சிணுங்கி இலையை நன்றாக அரைத்து ஒரு குவளை தயிறுடன் கலந்து காலை உணவிற்கு முன் சாப்பிடவும். • தொட்டா சிணுங்கி இலைச்சாறை தேமல் மேல் பூசிவர தேமல் குறையும். 

• தொட்டா சிணுங்கி இலை, வேர் இரண்டையும் காய வைத்து பொடி செய்து பாலில் கலந்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் ஒரு மாத காலம் குடிக்க சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும். • ஆண்மைக்குறைபாடு உள்ளவர்கள் இதன் இலையை அரைத்து பாலில் 5 கிராம் கலந்து சாப்பிடவேண்டும்.

தொடர்ந்து 45 நாட்களுக்கு சாப்பிட்டு வர ஆண்மை பெருகும். 

• மாதவிடாயின்போது ஏற்படும் அதிகமான இரத்தப்போக்கை கட்டுப்படுத்த முழுச்செடியையும் இடித்து சாறு எடுத்து, 4 தேக்கரண்டி சாற்றுடன், தேன் கலந்து மூன்று வேளையும் குடிக்க வேண்டும். அல்லது ஒரு கைப்பிடி அளவு இலைகளுடன் சிறிதளவு சீரகம் வெங்காயத்தைச் சேர்த்து அரைத்து எலுமிச்சை அளவு சாப்பிடவேண்டும். 
ரத்தக்கொதிப்பு, இதய படபடப்பு, தூக்கமின்மை, நீரிழிவு பிரச்னை, கல்லீரல் பிரச்னை போன்றவைகள் கட்டுக்குள் வைக்கும் மருதம் பட்டை
• தொட்டா சிணுங்கியை பசையாக்கி கட்டிகள் இருக்கும் இடத்தில் மேல்பூச்சாக போட்டு 2 மணி நேரத்துக்குபின் கழுவிவர கட்டிகள் கரையும்.

மார்பக கட்டிக்கு நல்ல பலனைத் தரும். 

• தொட்டா சிணுங்கி இலையின் சாற்றை சிறிது எடுத்து குழிப்புண்களில் விட்டு, ஒரு வெற்றிலையை காயத்தின் மீது வைத்து துணியால் கட்டுப்போட்டு வர, லேசில் ஆறாத நாள்பட்ட குழிப்புண்கள் கூட விரைவில் ஆறி விடும்...என்றார் சித்த மருத்துவர் Dr., தி. தங்கரதி.சித்த மருத்துவ தகவல் தொகுப்பு:- சங்கரமூர்த்தி... 7373141119

No comments:

Post a Comment