Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Thursday, July 23, 2020

மாணவர்கள் JEE தேர்வு எழுதுவதற்கு 12-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றால் போதும்: மத்திய அரசு தகவல்..!!



டெல்லி: மாணவர்கள் JEE தேர்வு எழுதுவதற்கு 12-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றால் போதும் என்று மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. JEE தேர்வு எழுத 12-ம் வகுப்பில் சதவீத மதிப்பெண் பெற வேண்டும் என்ற நிபந்தனை தளர்த்தப்பட்டுள்ளது.

இந்தியத் தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்கள் அதாவது ஐஐடி-க்களில் மாணவர்கள் படிக்க வேண்டுமெனில், கூட்டு சேர்க்கை வாரியம் எனப்படும் JEE நடத்தும் மேம்படுத்தப்பட்ட தேர்வுகளில் தேர்ச்சி பெற்று, முதல் 20 சதவீத மதிப்பெண்களைப் பெற்றிருக்க வேண்டும் அல்லது 12-ம் வகுப்புப் பொதுத்தேர்வில் குறைந்தபட்சம் 75 சதவீத மதிப்பெண்களைப் பெற்றிருப்பது போதுமானது என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், IIT மாணவர்கள் சேர்க்கைக்கான விதிமுறைகளை இந்த ஆண்டில் JEE தளர்த்தியுள்ளது. JEE மேம்படுத்தப்பட்ட தேர்வுகளில் தேர்ச்சி பெறும் தகுதிவாய்ந்த மாணவர்கள், 12-ம் வகுப்பில் எவ்வளவு மதிப்பெண்கள் எடுத்திருந்தாலும் பிரச்சினையில்லை என்று தகவல் வெளியாகி உள்ளது. மாணவர்கள் JEE தேர்வு எழுதுவதற்கு 12-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றால் போதும் என்று மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. மேலும், 12-ம் வகுப்பில் சதவீத மதிப்பெண் பெற வேண்டும் என்ற நிபந்தனை தளர்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment