Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Thursday, July 23, 2020

ஜேஇஇ முதல்நிலைத் தேர்வர்களுக்கான விதிமுறையில் மாற்றம்



ஜேஇஇ முதல்நிலைத் தேர்வர்களுக்கு சலுகை அறிவித்து மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்.

இது குறித்து அவர் தனது சுட்டுரையில் கூறியிருப்பதாவது, ஜேஇஇ முதல்நிலைத் தேர்வர்கள் கவனத்துக்கு..

என்ஐடி, மத்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் சேர ஜேஇஇ முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெறுவதோடு, பனிரெண்டாம் வகுப்புப் பொதுத் தேர்வில் 75% மதிப்பெண் பெறுவது கட்டாயம் என்ற விதிமுறை தளர்த்தப்படுவதாக அறிவித்துள்ளார்.

75% மதிப்பெண் அவசியம் என்ற விதிமுறை தளர்த்தப்பட்டு, பனிரெண்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றதற்கான சான்றிதழே போதுமானது என்ற வகையில் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது

ஏற்கனவே ஜேஇஇ அட்வான்ஸ் தேர்வர்களுக்கும் இந்த சலுகை அறிவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment