Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Saturday, August 1, 2020

10ஆம் வகுப்பு, ITI முடித்தவர்களுக்கு ரூ.62,000 வரை சம்பளம்..!




ஐடிஐ தேர்ச்சி பெற்றவர்கள் skilled Assistant garade II பதவிக்கும் பத்தாம் Fitter grade II பதவிக்கும் விண்ணப்பிக்க தமிழக மருத்துவ சேவைகள் ஆட்சேர்ப்பு வாரியம் (MRB) அறிவிப்பு வெளியிட்டுள்ளது.


skilled Assistant garade II பதவிக்கு மொத்தம் 87 காலிப்பணியிடங்கள் உள்ளது. இதற்கு விண்ணபிக்க விரும்புவோர் ஐடிஐ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இவர்களுக்கான ஊதியம் 7 வது ஊதியக்குழு சம்பள அளவின் அடிப்படையில் வழங்கப்படும். விண்ணப்பதாரர்கள் www.mrb.tn.gov.in என்ற முகவரியில் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து ஆகஸ்ட் 16க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

Fitter grade II பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றதுடன் மோட்டார் வாகன மெக்கானிக்கல் தேசிய வர்த்தக சான்றிதழ் (NTC) பெற்றிருக்க வேண்டும்.விண்ணப்பிப்பவர்கள் கல்வி மற்றும் தொழில்நுட்ப திறன் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். இவர்களுக்கு 7 வது ஊதியக்குழு படி நிலை 8க்கு மாதந்தோறும் ரூ.19,500 - ரூ.62,000 சம்பளம் வழங்கப்படும்.

இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் ஆகஸ்ட் 16 ஆம் தேதிக்குள் விண்ணப்பித்து கட்டணத்தை செலுத்த வேண்டும். விண்ணப்ப கட்டணம் ரூ.500 மற்றும் பிற வகுப்பினருக்கு (SC/SCA/ST/DAP) ரூ.250 நெட்பேங்கிங், கார்ட், மொபைல் வால்ட் மற்றும் சலான் மூலமாக செலுத்தி விண்ணப்பிக்கலாம்.

No comments:

Post a Comment