தமிழக அரசின் அம்மா இரு சக்கர வாகனத் திட்டத்தின் கீழ், மானியம் பெறுவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் த.ரத்னா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
அம்மா இருசக்கர வாகனத் திட்டத்தின் கீழ், இருசக்கர வாகனம் பெறுவதற்கான மானியம் அளிக்கப்பட உள்ளது. ரூ.25,000 அல்லது வாகனத்தின் விலையில் 50 சதவிகிதம் ஆகியவற்றில் எது குறைவோ அது வழங்கப்படும். மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.31,250 வழங்கப்படும்.
பயனாளிகள் தங்களது வாகனத்தைத் தோவு செய்யலாம். ரிசா்வ் வங்கியால் அதிகாரம் அளிக்கப்பட்ட வங்கிகளிடமிருந்து கடன் பெறலாம். 125.சி.சி திறன் வரையிலான வாகனத்தை மட்டுமே வாங்க வேண்டும்.
விண்ணப்பங்களுக்கு எந்த கட்டணமும் இல்லை. வட்டார வளா்ச்சி அலுவலகங்கள், நகராட்சி அலுவலகங்கள், பேரூராட்சி அலுவலகங்கள் மற்றும் ஆட்சியா் அலுவலகங்களில் இலவசமாக விண்ணப்பங்கள் கிடைக்கும்.
மேலும், இணையதள முகவரியிலும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
விண்ணப்பிக்கும் முறை, தகுதிகள், வயது வரம்பு, சலுகைகள் போன்ற விவரங்கள் இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஆகஸ்ட் 7- ஆம் தேதி மாலை 5 மணிக்குள் அளிக்க வேண்டும்.
WORKING TEACHERS SPECIAL TET STUDY MATERIAL
Saturday, August 1, 2020
அம்மா இரு சக்கர வாகனத் திட்டம்: மானியம் பெற விண்ணப்பிக்கலாம்
Tags
விண்ணப்பிக்க
விண்ணப்பிக்க
Tags
விண்ணப்பிக்க
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment