Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Tuesday, August 4, 2020

மதிப்பெண்கள் அடிப்படையிலேயே 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரிசல்ட்: அமைச்சர் செங்கோட்டையன்


கொரோனா வைரஸ் காரணமாக ஒத்தி வைக்கப்பட்ட 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஜூன் 15 ஆம் தேதி முதல் நடைபெறவிருந்தது. அதற்காக ஹால்டிக்கெட் கொடுக்கும் பணி முடிந்து, தேர்வு நடத்தும் பணிகள் அனைத்தும் முழுவீச்சில் நடைபெற்றது. ஆனால் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்யுமாறும், ஒத்தி வைக்குமாறும் ஆசிரியர்கள் சங்கம் உட்பட பலரும் கோரிக்கை விடுத்து வந்தனர். அதனால் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வும் 11 ஆம் வகுப்பின் மீதமுள்ள தேர்வுகளும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அதே போல மாணவர்களின் காலாண்டு, அரையாண்டு தேர்வின் அடிப்படையிலும் வருகை அடிப்படையிலும் மதிப்பெண்கள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களின் பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகிய நிலையில், 10 ஆம் வகுப்பு தேர்வு எப்போது வெளியாகும் என இதுவரை எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை. இது தொடர்பாக சமீபத்தில் முதல்வர் பழனிசாமி கல்வித்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். இந்த நிலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், 10 ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்பைடையிலேயே பொதுத் தேர்வு ரிசல்ட் இருக்கும் என்றும் அதனை விரைவில் வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறினார். மேலும், தமிழக அரசு அமைக்கும் குழுவின் கருத்தை அறிந்த பின்னர், புதிய கல்வி கொள்கை குறித்து முடிவு செய்யப்படும் என்றும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment