Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Tuesday, August 4, 2020

பள்ளி மாணவர்களுக்கான முட்டைகளை பெற்றோர்களை அழைத்து வழங்க உத்தரவு


பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு முட்டை, நாப்கீன் வழங்குவது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு கடந்த 30 ஆம் தேதி விசாரணைக்கு வந்த போது, பள்ளிகள் திறக்கப்படாத சூழலில் மாணவர்களுக்கு முட்டை, மாணவிகளுக்கு நாப்கின் வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும் எப்படி முட்டை, நாப்கின் வழங்கப்பட உள்ளது என்பதை ஆகஸ்ட் 3 ஆம் தேதி தமிழக அரசு தெரிவிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தனர்.

அதன் படி நேற்று மீண்டும் அந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, தமிழகத்தில் அனைத்து மாணவர்களையும் அழைத்து முட்டை வழங்குவது சாத்தியம் இல்லை என்றும் பள்ளிகளில் தனிமனித இடைவெளி கடைபிடிக்க முடியாது என்றும் ஏப்ரல் முதல் ஜூலை வரை மாணவிகளுக்கு 21.50 லட்சம் நாப்கின்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதனைக் கேட்டுக் கொண்ட நீதிபதிகள், டாஸ்மாக்கில் தனிமனித இடைவெளியுடன் மது விற்கும் போது மாணவர்களுக்கு முட்டை வழங்க முடியாதா? முட்டை வழங்க முடியாது என்றால் டாஸ்மாக்கை மூட வேண்டியது தானே? என சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளனர். மேலும், முட்டை வழங்க என்ன திட்டம் இருக்கிறது என்பதை நாளை(இன்று) தெரிவிக்க வேண்டும் என்று அரசுக்கு உத்தரவிட்டனர்.

இந்த நிலையில், ஊரடங்கால் வழங்கப்படாமல் இருக்கும் பள்ளி மாணவர்களுக்கான முட்டைகளை மாணவர்களின் பெற்றோர்களை அழைத்து வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். பள்ளிகளில் முட்டை வழங்க முடியாவிட்டால்ப் ரேஷன் கடைகளில் கொடுக்க வேண்டும் என்றும் மாணவிகளுக்கு நாப்கின் வழங்குவது குறித்தும் அரசு முடிவெடுக்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கு விசாரணையை வெளியிட்டுள்ளனர்.

No comments:

Post a Comment