Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Saturday, August 1, 2020

தேசியக் கல்விக் கொள்கை - 2020 பல்திறன் கொண்ட மாணவர் சமுதாயத்தை உருவாக்கும்!



மொழியியல் அறிஞர் முனைவர் கு. சிதம்பரம்!

தற்பொழுது நடைமுறையில் உள்ள பழைய கல்விக் கொள்கை பல்வேறு முரண்பாடுகளைக் கொண்டுள்ளது. ஏழைக்கு ஒரு கல்வி, பணக்காரனுக்கு ஒரு கல்வி என்ற நிலை உள்ளது. அதேபோல பள்ளிகளில் தற்பொழுது நடைமுறையில் உள்ள பாடத்திட்டம் மத்திய அரசு பள்ளிக்கு ஒன்று, மாநில அரசு பள்ளிக்கு ஒன்று, தனியார் பள்ளிகளுக்கு ஒன்று என்ற பாகுபாடு நிலவி வருகின்றது. இதனால் தேசியத் தரம் என்ற ஒன்றை வரையறுக்க இயலாத நிலை நமது பழைய கல்விக் கொள்கையில் இருந்து வருகின்றது. 

பள்ளிக் கல்வி முதல் உயர்க் கல்வி வரை இருந்து வரும் இத்தகைய பாடத்திட்ட முரண்பாடுகளால் வேலைவாய்ப்புக்கு ஏற்ற திறனை மாணவர்களுக்குக் கொடுப்பதில்லை. இன்றைய உயர்கல்வி என்பது வேலை வாய்ப்பு மற்றும் வளர்ச்சி போக்குக்கு எதிராக உள்ளதால், பலர் தரமான கல்வி மற்றும் வேலை வாய்ப்பிற்கு வெளிநாடு செல்ல வேண்டிய நிலை உள்ளது. 

மேலும், பழைய கல்விக் கொள்கை, கல்வியில் வர்த்தகப் போட்டியை மட்டுமே ஊக்குவிக்கக்கூடியதாக உள்ளதால், கல்வித் தரமும் வேலை வாய்ப்பும் சுய சார்பும் எட்டாக்கனியாகவே உள்ளது!

இந்தக் குறையினைப் போக்கும் வகையில், மாண்புமிகு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் தலைமையில் அமைந்த மத்திய அரசு 2015ஆம் ஆண்டு புதிய தேசிய கல்விக் கொள்கையை அமைக்க குழு அமைத்தது. கடந்த ஐந்து ஆண்டுகளாக அந்தக் குழு மேற்கொண்ட ஆய்வின் வாயிலாக புதிய தேசியக் கல்விக்கொள்கை- 2020 உருவாக்கப்பட்டுள்ளது . 

இந்தப் புதிய கல்விக் கொள்கையானது, இந்தியா முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் இருந்து வந்த முரண்பட்ட தன்னாட்சி பாடதிட்ட முறைகளுக்கு ஒரு தீர்வு கண்டுள்ளது. இனி தேசிய கல்வி அமைச்சகத்தின்கீழ் அனைத்து கல்வி நிறுவனங்களும் கொண்டுவரப்பட்டு, அனைவருக்கும் வேலை வாய்ப்பைத் தரக்கூடிய தேசிய தரம் வாய்ந்த கல்வி கிடைக்க வழிவகை செய்துள்ளது!

இனி மாணவர்களின் பல்மொழித்திறன் உள்ளிட்ட தொழில்நுட்பத் திறன்களை மேம்படுத்தும் வகையில் அனைவருக்கும் வேலைவாய்ப்பைத் தரக்கூடிய தரமான ஒருங்கிணைந்த பாடத்திட்டத்தின் வழி கல்வி கிடைக்கும். இது பல வளர்ந்த நாடுகளின் கல்வித்திட்டத்தோடு ஒப்பிட்டு நோக்கும்பொழுது, உலக நாடுகளோடு நாம் போட்டியிடும் அளவிற்கு உள்ளது!

No comments:

Post a Comment