JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU
SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர விண்ணப்பித்த மாணவர்கள், தங்கள் சான்றிதழ்களை இணையதளத்தில் பதிவேற்றும் பணி தொடங்கியுள்ளது.
தமிழகம் முழுவதும் உள்ள 109 அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் மற்றும் 54 பாலிடெக்னிக் கல்லூரிகளில் சேருவதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு ஜூலை மாதம் நடைபெற்றது.
இதில் மொத்தம் உள்ள 92,000 இடங்களுக்கு 3,12,883 பேர் விண்ணப்பித்துள்ளதாகவும், அதில் 2,25,819 பேர் கட்டணம் செலுத்தி உள்ளதாகவும் மாநில உயர்கல்வித்துறை தெரிவித்திருந்தது.
ஆனால் அண்மையில் பொதுத்தேர்வு முடிவுகள் வெளியான. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக விதிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக இந்த ஆண்டு எல்லாம் தள்ளிப்போகிறது.

இதன்காரணமாக கல்லூரிகளில் சேர விண்ணப்பித்த மாணவர்கள் தங்கள் சான்றிதழ்களை இணையதளத்தில் இன்று முதல் பதிவேற்றும் பணி தொடங்கியுள்ளது. இதற்காக தமிழக அரசு சார்பில் www.tngasa.in என்ற இணையதளம் அறிவிக்கப்பட்டது .
இதையடுத்து பல்வேறு இடங்களில் மாணவர்கள் பதிவேற்றம் செய்து வருகின்றனர். சான்றிதழ்களை வரும் 10-ம் தேதி வரை பதிவேற்றம் செய்யலாம் என்று உயர்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment