JOIN OUR THAMIZHKADAL TECH SOCIAL MEDIAS





Sunday, August 16, 2020

ப்ளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு..!!


D.T.E.d., எனப்படும் தொடக்கக் கல்வி பட்டயப் படிப்பில் சேர பிளஸ் 2 முடித்த மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த ஜூலை 16ஆம் தேதி 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது. இதையடுத்து மாணவர்கள் பல்வேறு கல்லூரிகளில் தாங்கள் விருப்பப்படும் பாடங்களை படிக்க விண்ணப்பம் செய்து வருகின்றனர். சில மாணவர்கள் அடுத்து என்ன படிக்கலாம் என்று யோசித்துக் கொண்டே இருக்கின்றனர். இந்த நிலையில் மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.

அதாவது, D.T.E.d., எனப்படும் தொடக்கக் கல்வி பட்டயப் படிப்பில் சேர பிளஸ் 2 முடித்த மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் அறிவித்துள்ளது. பன்னிரண்டாம் வகுப்பு முடித்த மாணவர்கள் வரும் 17ஆம் தேதி முதல் 28ம் தேதி வரை www.tnscert.org என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.. விண்ணப்பிக்கும் போதே அதற்கான கட்டணத்தையும் செலுத்தி விட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது .

No comments:

Post a Comment