Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Wednesday, August 12, 2020

காலை வேளையில் இந்த ஜூஸை தினமும் குடிங்க....


அன்றாடம் ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிட்டு வந்தால் மருத்துவச் செலவுகளை தவிர்த்து ஏராளமான செல்வங்களை சேமித்து விடலாம்.எனவே, நமது உடலுக்கு ஆரோக்கியம் தரும் பீட்ரூட்டை ஜூஸ் செய்து, அதனுடன் இஞ்சி மற்றும் எலுமிச்சை சாற்றை கலந்து குடித்தால் ஏராளமான நன்மைகளை பெற்று விடலாம்.

இந்த ஜூஸை தினம் காலையில் எழுந்து வெறும் வயிற்றில் குடித்து வர வேண்டும்.அப்படி தினமும் காலையில் வெறும் வயிற்றில் இந்த ஜூஸை குடித்தால் எவ்வளவு நன்மைகளை பெறலாம்ன்னு தெரியுமா?இயற்கையான இந்த பீட்ரூட் ஜூஸை குடிப்பதால், நமது உடம்பின் உயர் ரத்த அழுத்தத்தை குறைக்கிறது. மேலும், இதில் உள்ள நைட்ரேட் கூறுகள் ரத்த நாளத்தை விரிவுபடுத்தி ரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்கிறது.

மூளைக்குச் செல்லும் ரத்தத்தின் அளவை அதிகரிக்க செய்து, மூளையில் கட்டி மற்றும் பக்கவாதம் வராமல் தடுக்கிறது.மூலிகை குணம் நிறைந்த இந்த பானத்தில் ஏராளமான சத்துக்கள் மற்றும் ஆன்டி ஆக்ஸிடென்டுகள் உள்ளது. எனவே இது நமது உடலில் உள்ள ஒவ்வொரு செல்லையும் ஊக்கப்படுத்தி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து உங்களின் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

நமது வயிற்றில் உள்ள அமிலத்தை சமப்படுத்தி, அஜீரணம் மற்றும் வயிற்று வலி போன்ற வயிறு சம்பந்தப்பட்ட நோய்களுக்கு அருமருந்தாக செயல்படும்.காலையில் இந்த ஜூஸை குடிப்பதால், நமது சருமத்தின் வளர்ச்சியை ஊக்கப்படுத்தி, ஆரோக்கியமான மற்றும் பளபளப்பான நிறத்தை கொடுக்கும்.பீட்ரூட் ஜூஸில் உள்ள இயற்கையான சத்துக்கள் மூலம் பெருங்குடலில் தேங்கியுள்ள அசுத்தம் மற்றும் நச்சுக்களை நீக்கி, நமது வயிற்றில் உள்ள குடலை எப்போதும் சுத்தமாகவும், ஆரோக்கியமாகவும் பாதுகாக்கும்.

No comments:

Post a Comment