Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Thursday, August 27, 2020

அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவர் சேர்க்கை 'ஆன்லைன்' மூலம் விண்ணப்பிக்க அறிவிப்பு

அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் (ஐ.டி.ஐ.,) மற்றும் தனியார் தொழிற் பயிற்சி நிலையங்களில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களில், 2020-ம் ஆண்டு மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. 

மாணவர்கள், http://nimiprojects.in/det-onlineadmission/ என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். 

குறைந்தபட்ச கல்வித் தகுதி, 8 மற்றும் 10-ம் வகுப்புதேர்ச்சி முதல் பட்டதாரிகள் வரை விண்ணப்பிக்கலாம். குறைந்தபட்ச வயது வரம்பு ஆண்களுக்கு, 14 முதல் 40 வயது வரை அனுமதி உண்டு. 

பெண்களுக்கு வயது உச்சவரம்பு இல்லை. தகுதி வாய்ந்த மாணவ, மாணவியர் அனைவரும், மாவட்டத்திலுள்ள தொழிற்பயிற்சி நிலையங்களில் பொறியியல் மற்றும் பொறியியல் அல்லாத தொழிற்பிரிவுகளில் சேர்ந்து பயிற்சி பெற்று அரசு, பொதுத்துறை, தனியார் மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெறலாம்.

மேலும், தொழிற்பிரிவுகளில் பயிற்சி பெறும் போது தொழில் நிறுவனங்களில் 'இன்டர்ன்ஷிப்' பயிற்சி உதவித் தொகையுடன் வழங்கப்படும்.பயிற்சி முடித்தவர்களுக்கு தொழில் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெறுவதற்கும் ஏற்பாடு செய்யப்படும்.

தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிற்சியளிக்கப்படும் தொழிற்பிரிவுகள் குறித்து, www.skilltraining.tn.gov.in என்ற இணையதளத்தில் காணலாம். 

ஆன்லைனில், செப்.,17க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

No comments:

Post a Comment