Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Thursday, August 27, 2020

கல்வியியல் கல்லூரி காலியிடங்களில் அரசு கல்லூரி பேராசிரியர்கள்: பணி வாய்ப்புக்காகக் காத்திருக்கும் ஆசிரியர்கள் எதிர்ப்பு

தமிழகத்தில் கல்வியியல் கல்லூரி காலியிடங்களில் அரசு கல்லூரிப் பேராசிரியர்கள் நியமிக்கப்படுவ தற்கு பணி வாய்ப்புக்காகக் காத்தி ருக்கும் ஆசிரியர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் சென்னை அடை யாறு, புதுக்கோட்டை உட்பட 14 அரசு கல்வியியல் (பிஎட், எம்எட்) கல்லூரிகளும், 650-க்கும் மேற் பட்ட தனியார் கல்லூரிகளும் உள்ளன. இதற்கான தேசிய ஆசிரியர் கல்விக் குழுமத்தின் தலைமை அலுவலகம் டெல்லியில் செயல்படுகிறது.

சமீபத்தில் இக்குழுமம் நடத் திய ஆய்வின் அடிப்படையில் தமிழகம் உள்ளிட்ட பிற மாநில அரசு கல்வியியல் கல்லூரிகளில் காலியிடம், கட்டமைப்பு வசதி களை மேம்படுத்த உத்தரவிடப்பட்டது. இதையடுத்து, அரசு கல்வியியல் கல்லூரிகளுக்கான முதல்வர், பேராசிரியர், உதவிப் பேராசிரியர் காலிப் பணி யிடங்களை நிரப்ப தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

இதற்காக அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் எம்எட், பிஎட் மற்றும் ஸ்லெட், நெட் அல்லது பி.எச்டி தகுதியில் பணிபுரியும் ரெகுலர் பேராசிரியர்கள் குறித்து கணக்கெடுக்க அனைத்து மண் டலக் கல்லூரிக் கல்வி இயக் குநர்களுக்கு மாநில உயர் கல்வித் துறை சுற்றறிக்கை அனுப்பியது.

இந்த நடவடிக்கையால் ஏற்கெனவே கல்வியியல் கல்லூரிகளில் பணிபுரியும் வாய்ப்புக்காகக் காத்திருக்கும் உதவிப் பேராசிரியர்கள் பாதிக் கப்படுவதாகவும், கல்வியியல் கல்லூரிக்கு மாறுதலாகும் பேராசி ரியர்களின் காலியிடங்களுக்கு அரசு கல்லூரிகளில் புதிய நியம னம் உண்டா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

இதுகுறித்து தனியார் கல்வியியல் கல்லூரி உதவிப் பேராசிரியர் பார்த்தசாரதி கூறியது:

முதல்கட்டமாக சென்னை, கோவை, வேலூர் அரசு கல்வியியல் கல்லூரிகளில் முதல்வர், பேராசிரியர்கள் என 50-க்கும் மேற்பட்ட காலியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே தமிழகத்தில் ஸ்லெட் அல்லது நெட் தகுதித் தேர்வுடன் பி.எச்டி. முடித்த சுமார் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வேலைக்காகக் காத்திருக்கின் றனர்.

இவர்களில் சுமார் 10 ஆயிரம் பேர் வரை கல்வியியல் கல்லூ ரிகளில் பணிபுரிவதற்கான தகுதியோடு தனியார் கல்வி நிறுவனங்களிலும், பிற துறை களிலும் குறைந்த சம்பளத்தில் பணிபுரிகின்றனர்.

ஆகவே கல்வியியல் கல்லூரிக் காகவே பிரத்யேகத் தகுதி (எம்.எட்) பெற்றவர்களைக் கொண்டு காலியிடங்களை நிரப்ப அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment