Breaking

Thursday, August 27, 2020

வங்கி தேர்வுக்கு ஆன்லைனில் இலவச பயிற்சி: 'வாட்ஸ் ஆப்' எண்ணை பதிவு செய்ய அழைப்பு


நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், தன்னார்வ பயிலும் வட்டத்தின் மூலம், பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள், இலவசமாக நடத்தப்பட்டு வருகின்றன.

தற்போது, கொரோனா ஊரடங்கால், பயிற்சி வகுப்புகள் நடத்தவில்லை. போட்டியாளர்கள், வீட்டில் இருந்தபடியே தேர்வுக்கு தயாராகி வருகின்ற நிலையில், கிராமப்புற மாணவர்களும், போட்டித் தேர்வுகளை எளிதில் எதிர்கொள்ள, வங்கி அலுவலர், 'ஐ.பி.பி.எஸ்.,- பி.ஓ.,' முதுநிலை தேர்வுக்கான இலவச ஆன்லைன் பயிற்சி வகுப்பு, இணையதளம் மூலம் அளிக்கப்பட உள்ளது.

இத்தேர்வு, வரும், அக்., 3, 10, 11 தேதிகளில் நடக்கிறது. தேர்வுக்கு, https://www.ibps.in/cwe-probationary-offieceers-management-trainees/ / என்ற இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம். 

தேர்வுக்கான இலவச ஆன்லைன் பயிற்சி வகுப்புகள், வரும், 29 முதல், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் துவங்க உள்ளது. 

கலந்து கொள்ள விருப்பமுள்ள மனுதாரர்கள், தங்களின் விபரத்தை, onlineclassnkl@gmail.com என்ற மின்னஞ்சல் மூலமாகவோ, 04286 -222260 என்ற தொலைபேசி மூலமாகவோ அல்லது மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை தொடர்பு கொண்டு, தங்களுடைய வாட்ஸ் ஆப் எண்ணை பதிவு செய்து, இலவச பயிற்சி பெறலாம். இவ்வாறு, கலெக்டர் மெகராஜ் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment