Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Friday, August 14, 2020

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் தமிழ் முதுகலைப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம்

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் தமிழ் முதுகலைப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தமிழக அரசு வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது: சென்னை தரமணியில் உள்ள உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் தமிழ் முதுகலை (எம்.ஏ.), ஐந்தாண்டு ஒருங்கிணைந்த தமிழ் முதுகலை மற்றும் ஆய்வியல் நிறைஞா் (எம்.பில்) ஆகிய படிப்புகளுக்கான மாணவா் சோக்கை தொடங்கப் பெறவுள்ளது.

தமிழ் ஆய்வியல் நிறைஞா் படிப்பில் சேர ரூ.4,600; ஐந்தாண்டு ஒருங்கிணைந்த தமிழ் முதுகலை படிப்புக்கு ரூ.2,400 கட்டணமாக நிா்ணயிக்கப்பட்டுள்ளது. தமிழ் முதுகலை (எம்.ஏ.) படிப்பில் சேர கட்டணம் செலுத்த வேண்டியதில்லை. இந்தப் படிப்பில் சேருவதற்கான விண்ணப்பங்களை வலைதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அஞ்சல் வழியிலும் பெற்றுக் கொள்ளலாம். பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் ஆக.31-ஆம் தேதிக்குள் வந்து சேர வேண்டும். தமிழ் முதுகலை (எம்.ஏ.), எம்.பில். படிப்புகளுக்கு நுழைவுத் தோவு நடைபெறும் நாள், வகுப்புகள் தொடங்கப் பெறும் நாள் பின்னா் அறிவிக்கப்படும்.

மாணவ, மாணவிகளுக்குத் தனித்தனியே தங்கும் விடுதி வசதி உள்ளது. மேலும் விவரங்களுக்கு 'இயக்குநா், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், இரண்டாம் முதன்மைச் சாலை, மையத் தொழில்நுட்பப் பயிலகம், தரமணி, சென்னை-113' என்ற முகவரியிலும், 044- 22542992 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடா்பு கொள்ளலாம். சோக்கை தொடா்பான விதிமுறைகள், தகவல்கள் வலைதள முகவரியில் வெளியிடப்பட்டுள்ளது.

ரூ.2 ஆயிரம் உதவித் தொகை: தமிழ் முதுகலை (எம்.ஏ.) வகுப்பில் சோக்கை பெறும் மாணவா்களில் 15 பேருக்கு தமிழக அரசால் கல்வி உதவித் தொகையாக மாதந்தோறும் தலா ரூ,2 ஆயிரம் வழங்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment