Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Wednesday, August 12, 2020

புதுச்சேரி ஜிப்மரில் பிஎஸ்சி, எம்எஸ்சி, மருத்துவம் சார் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க அழைப்பு


புதுச்சேரி: ஜிப்மர் மருத்துவக்கல்லூரியில் பிஎஸ்சி, எம்எஸ்சி தொடங்கி மருத்துவம் சார் படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் வெளியிடப்பட்டுள்ளன. புதுச்சேரியில் உள்ள மத்திய அரசின் ஜவஹர்லால் மருத்துவ பட்ட மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் (JIPMER) எம்பிபிஎஸ், எம்டி, எம்எஸ், எம்டிஎஸ், பிஎஸ்சி, எம்எஸ்சி, பிஎச்டி மற்றும் மருத்துவம் சார் படிப்புகள் உள்ளன.

ஜிப்மரில் எம்பிபிஎஸ் நுழைவுத் தேர்வானது நீட் கலந்தாய்வு முறையில் இக்கல்வியாண்டில் நடத்தப்பட உள்ளது. தற்போது பிஎஸ்சி, எம்எஸ்சி, எம்பிஎச், பிஜிடி, பிஜிஎப், பிபீடி மற்றும் பிஎச்டி படிப்புகளுக்கு இணையத்தில் விண்ணப்பங்கள் வெளியிடப்பட்டுள்ளன. ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வரும் செப்டம்பர் 1ஆம் தேதி கடைசி நாளாகும். 

ஹால் டிக்கெட்டுகளை வரும் செப்டம்பர் 12 முதல் 22ஆம் தேதி வரை ஜிப்மர் இணையத்தில் பதிவிறக்கம் செய்யலாம். தபாலில் அனுப்பப்படமாட்டாது. இதில் பிஇடி, பிஜிடி, பிஜிஎப், எம்எஸ்சி, எம்பிஎச் படிப்புகளுக்கு வரும் செப்டம்பர் 22ஆம் தேதி மதியம் 2 முதல் மாலை 3.30 வரை தேர்வு நடக்கும்.

தேர்வில் சிறப்பிடம் பெற்றோர் பட்டியல் செப்டம்பர் 29ஆம் தேதிக்குள் வெளியிடப்படும். கலந்தாய்வு செப்டம்பர் 30ல் துவங்கும். அதைத்தொடர்ந்து மாணவர் சேர்க்கை நடக்கும். பிஎச்டி வகுப்பில் சேருவது தொடர்பான விவரங்கள் பின்னர் வெளியிடப்படும்.

No comments:

Post a Comment