Subscribe Us

Monday, October 12, 2020

அக்.16ம் தேதி நீட் தேர்வு முடிவுகள் வெளியீடு!

நீட் தேர்வுக்கான முடிவுகள் வரும் 16ம் தேதி வெளியாகும் என அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அறிவித்துள்ளார்.

கொரோனா அச்சுறுத்தலுக்கிடையே செப்.13 ஆம் தேதி நாடு முழுவதும் நீட் தேர்வு நடத்தப்பட்டது. போக்குவரத்து வசதி இல்லாததாலும், கொரோனாவால் பாதிக்கப்பட்டதாலும் பல மாணவர்கள் தேர்வில் பங்கேற்க முடியாத சூழல் ஏற்பட்டது. இதனால், தேர்வு எழுத முடியாத மாணவர்களுக்கு மறுவாய்ப்பு அளிக்குமாறு நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது.

இன்று அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், கொரோனாவால் பாதிக்கப்பட்டு தேர்வை எழுதாமல் போன மாணவர்களுக்கு வரும் 14ம் தேதி மீண்டும் நீட் தேர்வை நடத்த வேண்டும் என தேர்வு முகமைக்கு அறிவுறுத்தினர். அதன் படி, 14ம் தேதி மீண்டும் தேர்வு நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் அக்.16ம் தேதி இளங்கலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு முடிவுகள் வெளியாகும் என அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அறிவித்துள்ளார். மேலும், தேர்வு முடிவுகள் வெளியாகும் நேரம் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

Popular Feed