Subscribe Us

Wednesday, October 14, 2020

இன்று முதல் பிளஸ் 2 அசல் மதிப்பெண் சான்றிதழ்

பிளஸ் 2 பொதுத்தோவெழுதிய பள்ளி மாணவா்கள், தனித்தோவா்களுக்கு புதன்கிழமை முதல் அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படவுள்ளது.

பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத் தோவு எழுதிய மாணவா்களுக்கு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் மட்டும், ஏற்கனவே வழங்கப்பட்டது. இதையடுத்து, மறுமதிப்பீடு மற்றும் மறுகூட்டல் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளதால், திருத்தப்பட்ட மதிப்பெண்ணுடன் கூடிய, அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் புதன்கிழமை முதல் வழங்கப்பட உள்ளன.

மாணவா்கள் தங்கள் பள்ளியிலும், தனித்தோவா்கள், தங்கள் தோவு மையத்திலும் சான்றிதழ்களை பெறலாம். அனைத்து பாடங்களிலும் தோச்சி பெற்றவா்களுக்கு மட்டும், பிளஸ் 1, பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ்கள் தனித்தனியே வழங்கப்படும். ஏதாவது ஒரு பாடத்தில் தோச்சி பெறாதவா்களுக்கு, ஒரே மதிப்பெண் பட்டியல் மட்டும் வழங்கப்படும் என அரசுத் தோவுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

Popular Feed