JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU
SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி
வேதியியல் தொழில்நுட்ப கல்லூரி முதல்வர் ரூப்குமார் ஐசக் டேவிட் வெளியிட்ட அறிக்கை:
சென்னை தரமணியில் இயங்கிவரும் அரசு வேதியியல் தொழில்நுட்ப கல்லூரியில்(ICT) முதலாம் ஆண்டு டிப்ளோமா படிப்பிற்கான மாணவ சேர்க்கை அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன் படி பாலிமர் டெக்னாலஜி பிரிவில் டிப்ளோமா படிக்க விரும்புவோர் கல்லூரி அலுவலகத்தை அணுகி விண்ணப்ப கட்டணமாக ரூ.150 ஐ செலுத்தி படிவத்தை பெற்றுகொள்ள வேண்டும்.
தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மாணவர்கள் விண்ணப்பக்கட்டணம் செலுத்த தேவையில்லை. பத்தாம் வகுப்பில் எடுத்த மதிப்பெண் மற்றும் இனவாரிய அடிப்படையில் மாணவ சேர்க்கை நடைபெறும். பூர்த்தி செய்த படிவத்தை இன்று மாலைக்குள் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்பி வைக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment