Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Friday, October 16, 2020

அரசுப்பள்ளி மாணவர்களுக்கான 7.5% இட ஒதுக்கீடு தாமதம் : கண்கலங்கிய நீதிபதி

7.5% இட ஒதுக்கீடு தொடர்பான மனு விசாரணைக்கு வந்த நிலையில், தாமதம் ஆவதாகக் கூறி நீதிபதி கிருபாகரன் கண் கலங்கினார்.

கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற நீட் தேர்வின் முடிவுகள் இன்று வெளியாகவிருக்கிறது. மருத்துவ படிப்பில் அரசு மாணவர்களுக்கான 7.5% இட ஒதுக்கீடு அமல்படுத்தப்படும் வரை முடிவுகளை வெளியிட தடை கோரி மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், இது தொடர்பாக ஆளுநரின் செயலர் பதில் தர உத்தரவிட்டிருந்தனர்.

இந்த நிலையில் இன்று மீண்டும் அந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, 7.5% இட ஒதுக்கீடு விவகாரத்தில் ஆளுநருக்கு கோர்ட் காலக்கெடு விதிக்க முடியாது என்றும் ஆளுநரின் பரிசீலனையில் இட ஒதுக்கீடு சட்ட மசோதா இருப்பதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, நீட் தேர்வு முடிவுக்கு பின் கலந்தாய்வு, மாணவர் சேர்க்கை பற்றிய விவரத்தை அரசு எப்போது வெளியிடும் என நீதிபதி கேள்வி எழுப்பினர். மேலும், இட ஒதுக்கீடு தாமதம் ஆவதால் அரசு பள்ளி மாணவர்களின் வேதனையை விவரிக்க முடியாது எனக்கூறி நீதிபதி கிருபாகரன் கண்கலங்கினார்.

No comments:

Post a Comment