ஆயக்குடி L 'கல்வி ஆண்டை மாற்ற வேண்டும்'என, பழநி ஆயக்குடி மரத்தடி மையம் இயக்குனர் ராமமூர்த்தி கூறினார்.அவர் கூறியதாவது:
பள்ளிகள் திறப்பதில் தாமதமாவதால் இந்த கல்வியாண்டை ஜனவரி 2021 முதல் டிசம்பர் 2021 வரை மாற்ற அரசு பரிசீலனை செய்ய வேண்டும். ஆன்லைன் வகுப்புகள் நடத்தினாலும் மாணவர்களுக்கு பயன் இல்லை. அனைத்து மாணவர்களும் முழுமையாக பயன்பெற கல்வியாண்டை மாற்ற வேண்டும், என்றார்.