Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Monday, October 5, 2020

சிவில் சர்வீஸ் முதல்நிலைத் தேர்வு - சற்று கடினமாக இருந்ததாக தேர்வர்கள் கருத்து

ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட உயர் பணிகளுக்காக நடத்தப்படும் சிவில் சர்வீஸ் முதல்நிலை தேர்வுகள் இன்று நடந்தன 

மத்திய அரசின் பல்வேறு துறைகளில் புதிதாக உருவாக்கப்படும் பணியிடங்கள் மற்றும் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வுகளை யுபிஎஸ்சி நடத்தி வருகிறது. இவற்றில் சிவில் சர்வீஸ் தேர்வுகளை வழக்கம்போல மே மாத இறுதியில் நடத்த யுபிஎஸ்சி திட்டமிட்டிருந்தது. 

ஆனால் கொரோனா பரவல் காரணமாக தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்ட நிலையில், இன்று சிவில் சர்வீஸ் முதல்நிலைத் தேர்வுகள் நடைபெற்றன. இந்த தேர்வில் வெற்றி பெறுவோருக்கான பிரதான தேர்வு அடுத்த ஆண்டு ஜனவரி 8 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

கொரோனா பரவலைத் தடுக்க தேர்வர்கள் முக கவசம் அணிவது, தனிமனித இடைவெளியை கடைப்பிடிப்பது உள்ளிட்ட விதிமுறைகள் கட்டாயமாக்கப் பட்டன. காலை 9.30 மணி முதல் 11.30 மணி வரை மற்றும் மதியம் 2.30 மணி முதல் 4.30 மணி வரை என 2 கட்டங்களாக தேர்வு நடைபெற்றது

No comments:

Post a Comment