Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Thursday, October 29, 2020

தமிழகத்தில் பொறியாளர்கள் உருவாவதில்லை, பட்டதாரிகள்தான் உருவாகின்றனர்: உயர்நீதிமன்ற மதுரை கிளை.

தனியார் பொறியியல் கல்லூரி ஆசிரியர்களுக்கு கொரோனா கால ஊதியம் வழங்குவது தொடர்பாக திருச்சியை சேர்ந்த கார்த்திக் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், தமிழகத்தில் தனியார் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடைபெற்றுக்கொண்டிருக்கும் போதிலும், கல்லூரி ஆசிரியர்களுக்கு கொரோனா காலத்தில் ஊதியம் வழங்கவில்லை என்றும் எனவே அவர்களுக்கு ஊதியம் வழங்கவேண்டும் என்றும் கோரப்பட்டது. இந்த வழக்கு விசாரணை இன்று நடைபெற்றது. 

அப்போது தனியார் கல்லூரி ஆசிரியர்கள் தரப்பில், ஆசிரியர்கள் பல மாதங்களாக ஊதியம் இன்றி மிகவும் சிரமத்தில் உள்ளனர் என்றும் பலர் பிரியாணி கடைகளிலும், ஓட்டல்களிலும் பல்வேறு பணியாற்றி வருகின்றனர் என வாதிப்பட்டது. பின்னர் பேசிய நீதிபதிகள், “தமிழகத்தில் தேவைக்கு அதிகமாக புற்றீசல் போல் பொறியியல் கல்லூரிகள் உள்ளது; தற்போது தமிழகத்தில் பொறியாளர்கள் உருவாக்குவதில்லை, பொறியியல் பட்டதாரிகளை தான் உருவாகின்றனர். அதனால் தான் பல்வேறு சிக்கல்கள் ஏற்படுகிறது 

இது போன்ற பிரச்னைகளை களைய தேவைக்கேற்ப கல்லூரிகளை தொடங்க வேண்டும்” இவ்வாறு தெரிவித்தனர். 

மேலும், இந்த வழக்கில் தனியார், பொறியியல் கல்லூரி நிர்வாகிகள் சங்கத்தையும் எதிர் மனுதாரராக சேர்த்து பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

No comments:

Post a Comment