Search This Blog

Wednesday, October 7, 2020

ஆசிரியர்கள் கலந்தாய்வுநடத்த வலியுறுத்தல்

0 comments
மதுரை மாநகராட்சி பள்ளி ஆசிரியர்களுக்கு பொதுமாறுதல் கலந்தாய்வு நடத்த வேண்டும் என தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் வலியுறுத்தியுள்ளது. 

மாவட்ட தலைவர் தவமணி, செயலாளர் சந்திரன் ஆகியோர் கமிஷனர் விசாகனிடம் அளித்த மனு: 

ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு மற்றும் பொது மாறுதல் கலந்தாய்வு உடன் நடத்த வேண்டும். 2019 மார்ச்சுக்கு முந்தைய சேமநல நிதித் தொகையை மாநில கணக்காயர் கணக்கில் சேர்க்க வேண்டும். தேர்வுநிலை, சிறப்பு நிலை, ஊக்க ஊதியம் போன்ற பணப் பலன்களை பணிப் பதிவேட்டில் பதிவு செய்யும் நடைமுறையை தலைமையாசிரியர்களிடம் வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.

நடவடிக்கை எடுப்பதாக கமிஷனர் உறுதி அளித்தார்.மாநில துணை தலைவர் கார்த்திகேயன், செயற்குழு உறுப்பினர் சீனிவாசன், மாநகராட்சி ஆசிரியர் நலச்சங்க நிறுவனத் தலைவர் நமசிவாயம், தலைவர் ஜோசப் ஜெயசீலன், பொதுச்செயலாளர் ரங்கராஜன், கூட்டமைப்பு தலைவர் முனியசாமி உடன் இருந்தனர்.

No comments:

Post a Comment