Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Tuesday, October 20, 2020

'தீராத அல்சர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு'..

அடிக்கடி உணவில் மணத்தக்காளி கீரை சேர்த்து சாப்பிட்டு வர வேண்டும்.
தொடர்ந்து பச்சை வாழைப்பழம் சாப்பிட்டு வந்தால் வயிற்றில் உள்ள குடல்களில் பழுதுபட்ட லேசாக உள்ள சவ்வு தோள்கள் வளர செய்து வயிற்று புண்ணை விரைவில் ஆற்றிவிடும்.

பாகற்காயை உணவில் சேர்த்து கொண்டால் வயிற்றில் உள்ள கிருமிகள் அழிந்து உடல் வலிமை பெரும்.

வாகை மர பிசினை பொடியாக்கி அதில் பால் அல்லது வெண்ணெய் ஆகியவற்றை சேர்த்து சாப்பிட மூலநோய், குடல் புண் சரியாகும்.

வயிற்றுப்புண் உள்ளவர்கள் அடிக்கடி கஞ்சி குடிப்பது நல்லது. மேலும் மாசிக்காயுடன் துளசி சாறு சேர்த்து இடித்து அந்த விழுதை சாப்பிட்டு வர வயிற்றுப்புண் சரியாகும்.

சீந்தில்கொடி, சுக்கு ஆகிய இரண்டையும் சம அளவு எடுத்து அதில் நீர் சேர்த்து காய்ச்சி அதை வடிகட்டி 50 மில்லி அளவு எடுத்து அதனுடன் 35 கிராம் பெருங்காயம் சேர்த்து காய்ச்சி குழம்பு பதத்திற்கு எடுத்து வைத்து கொண்டு, தினமும் ஒருவேளை ஒரு கிராம் அளவு சாப்பிட்டு வர அல்சர் குணமாகும்.

No comments:

Post a Comment