DEPARTMENTAL EXAM DEC: 2020 | CODE: 065 | QUESTION PAPER WITH ANSWER

Monday, November 16, 2020

கன்னி ராசி: குருப் பெயர்ச்சி பலன்கள் 2020

அனைத்து ஆசிரியப் பெருமக்களுக்கும் வணக்கம். தங்களின் படைப்புகள் மாணவர்களுக்கு பயன்படவேண்டும் என நினைத்தால், உங்கள் படைப்புகளை thamizhkadal.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்கவும் உங்கள் அனுமதியோடு வெளியிடப்படும்.

JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU


SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி

மென்மையான அணுகு முறையை கொண்ட கன்னிராசி அன்பர்களே..

உங்களது பண்பும், நீதியும் நேர்மையும் எல்லோரையும் மிக எளிதில் கவரும்.பொதுவாக நல்ல செல்வாக்கும், ல்வமும்படைத்தவர்களாக இருப்பீர்கள். மென்மையான பேச்சும், நல்லகுணநலமும் கொண்டவர்கள் நீங்கள். உங்களுக்கு இந்த குருபெயர்ச்சி மிகசிறப்பாக அமையும். இதுவரை குருபகவான் உங்கள்ராசிக்கு 4-ம் இடத்தில் இருந்து பல்வேறு இன்னலை தந்திருப்பார். அவர் குடும்பத்தில் பலபிரச்சினைகளை உருவாக்கி இருப்பார். உறவினர்களிடையே வீண் விரோதம் வந்திருக்கும்.கணவன்-மனைவிஇடையே பிணக்குகள் ஏற்பட்டு இருக்கும். தூரத்து உறவினர்வகையில் விரும்பதகாதசம் பவங்களும் நடந்து இருக்கலாம்.

இந்தநிலையில் இப்போது குருபகவான் உங்கள் ராசிக்கு 5-ம் இடத்துக்கு செல்கிறார். இதுமிகவும்சி றப்பான நிலை. குடும்பத்தில் மகிழ்ச்சியைத் தருவார். திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகளை நடத்தி வைப்பார்.பொருளாதார வளத்தை அதிகரிக்க செய்வார். பெண்களால் மேன்மை கிடைக்கும். குழந்தைபாக்கியம் கிடைக்கும். இதனால் வாழ்க்கையில் வளம் காணலாம். மேலும் அவரது 5,7-ம் இடத்துப்பார்வைகள் சாதகமாக அமையும். இதனால் மேலும் நன்மைகள் அதிகரிக்கும். ஆனால் அவர்2021 ஏப்ரல் 4-ந்தேதிமுதல் 2021 செப்டம்பர் 14-ந்தேதி வரை அதிசாரம்பெற்று கும்பராசியில் இருக்கிறார். அவர் 2021 நவம்பர் 13-ந்தேதிஅன்று முழுபெயர்ச்சிஅடைந்து 6-ம்இடமான கும்பராசிக்கு மாறுகிறார். இது சிறப்பான இடம் இல்லை. அவரால் உடல்நலம் பாதிக்கப்படும். மனதில் தளர்ச்சி ஏற்படும். ஆனால்குருவின் 9-ம் இடத்துப்பார்வை சிறப்பாக உள்ளது. இதனால் துணிச்சல்பிறக்கும். பணவரவுகூடும். தேவையான பொருட்களை வாங்கலாம். பகைவர்களின் சதி உங்களிடம் எடுபடாது. அதன்பிறகு 2022 ஏப்ரல் 14-ந்தேதிஅன்றுபெயர்ச்சிஅடைந்து 7-ம் இடமான மீனராசிக்கு மாறுகிறார். இது சிறப்பான இடம். அவர் மகிழ்ச்சியை அதிகரித்து சுபநிகழ்ச்சியை தருவார்.

செல்வாக்கு மேம்படும் .பணப்புழக்கம் அதிகரிக்கும் .தேவைகள் பூர்த்தியாகும். எண்ணற்ற பலவசதிகள் கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு உயர்வை தருவார்.

மற்றகிரகங்களின்நிலை

சனிபகவான் தற்போது 4-ம் இடத்தில் இருக்கிறார். இது அவ்வளவு சிறப்பான இடம் என்று சொல்ல முடியாது. பொதுவாக 4-ம் இடத்தில் இருக்கும்போது சனிபகவான் குடும்பத்தில் வீண்விரோதத்தை கொடுப்பார். ஊர்விட்டு ஊர்செல்லும் நிலை உருவாகும். தாயை பிரிந்து செல்லும் நிலை ஏற்படலாம். சனி சாதகமற்ற இடத்தில்இருந்தாலும்அவரது3-ம் இடத்துப்பார்வை சிறப்பாக அமைந்துள்ளது. அதன்மூலம் நன்மை கிடைக்கும்.

இந்தநிலையில் 2020 டிசம்பர் 26-ந்தேதி அன்று சனிபகவான் மகரராசிக்கு பெயர்ச்சிஅடைகிறார். சனி5-ம் இடத்திற்கு செல்வதுகூடசிறப்பான இடம் என்று சொல்லமுடியாது. ஆனாலும் 4-ம் இடத்தில் இருந்தது போன்ற பின்தங்கிய பலனை தரமாட்டார்.5-ல்சனி இருக்கும்போது குடும்பத்தில் சிற்சிலபிரச்சினைகளை தருவார் என்பது பொதுவிதி. அவர் திருப்தியற்ற நிலையில் இருந்தாலும் அவரது 7-ம்இடத்து பார்வை சிறப்பாக உள்ளன.

இதனால் நன்மைகள் கிடைக்கும்.கேது 3-ம் இடமானவிருச்சிகத்தில் இருந்து பல்வேறு நன்மைகளை தந்து கொண்டிருக்கிறார். அவர்இறை அருளையும், பொருள் உதவியையும் கொடுப்பார். மேலும் உடல் உபாதைகளை குணமாக்குவார். ராகு9-ம்இடமான ரிஷபத்தில் இருக்கிறார். இது சிறப்பான இடம் என்று சொல்ல முடியாது. அவர்காரியத்தில்சிற்சிலதடைகளை உருவாக்கலாம்.

இதற்காக கவலை கொள்ள தேவை இல்லை காரணம்அவரது 4,7,மற்றும் 11-ம் இடத்துப்பின்னோக்கிய பார்வைகள் சாதகமாக உள்ளன.

இதன் மூலம் எந்த பிரச்சினையையும் முறியடித்து வெற்றிக்கு வழி காணலாம்.

இனி விரிவான பலனை காணலாம்.

கடவுனின் கருணை உங்களுக்கு கிடைக்கும். மனதில் இருந்த உளைச்சல் அடியோடு நீங்கும். உங்கள் மீதான பொல்லாப்புமறையும். தேவையான பொருட்களை வாங்கலாம். குடும்பத்தில் கடந்தகாலத்தைவிட மகிழ்ச்சி அதிகரிக்கும். திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள் கணவன்-மனைவிஇடையேஅன்பு, பாசம் இருக்கும். ஆன்மிக ஆன்றோர்களின் ஆசியும், அருளும் கிடைக்கும்.

புதிய வீடு மனைவாங்க யோகம்கூடிவரும். 2021 ஏப்ரல் 4-ந்தேதிமுதல் 2021செப்டம்பர் 14-ந்தேதி வரை அலைச்சல் இருக்கும். கணவன்- மனைவி இடையே அன்னியோன்யமான சூழ்நிலை இருக்காது. குடும்பத்தில் சிற்சிலபிரச்சினைகள் தலைதூக்கலாம். சிலர் மனஉழைச்சலுடன் காணப்படுவர். உத்தியோகம்.போலீஸ்,ராணுவத்தில் பணிபுரிபவர்கள் உயர்ந்தநிலையைஅடைவர்.
புதிய பதவி கிடைக்கும்.

தனியார்துறையில் பார்ப்பவர்களுக்கு வேலைப்பளு குறையும். பதவி உயர்வு கிடைக்கும். விரும்பிய இடத்திற்கு மாற்றம் கிடைக்கும். சம்பள உயர்வு வரும்.ஏதோ காரணத்தால் வேலையை இழந்தவர்கள் மீண்டும் வேலை கிடைக்கப்பெறுவர். வேலையின்றி இருப்பவர்களுக்கு வேலை கிடைக்க வாய்ப்பு உண்டு. ஏப்ரல் 4-ந்தேதிமுதல்செப்டம்பர் 14-ந்தேதிவரை தனியார்துறையில்இருப்பவர்களுக்கு வேலைப்பளு அதிகரிக்கும்.

மேல் அதிகாரிகளிடம் அனுசரித்துப் போகவும். வியாபாரிகள் குரு,கேதுவால்நல்ல லாபத்தைபெறலாம். வேலையின்றி இருப்பவர்கள்புதிய தொழிலை தொடங்கலாம். அதில் நல்ல வருமானம் கிடைக்கும். புதிய வியாபாரம் ஓரளவு அனுகூலத்தை கொடுக்கும். ஆன்மிக சம்பந்தபட்ட மற்றும் பூஜைபொருள்ட்கள் வியாபாரம் செய்பவர்கள் அதிகலாபத்தை பெறுவர். பகைவர்கள் சரண் அடையும்நிலை ஏற்படும். தங்கம்,வெள்ளி, வைரம் நகைகள் வியாபாரம் செய்பவர்கள்நல்ல வருமானத்தைபெறுவர்.
கணினி, அச்சுத்துறை, பத்திரிகை, கோவில் மற்றும் புண்ணியகாரியங்களுக்கான தொழில் ஆகியவை சிறந்து விளங்கும். அச்சகம், பத்திரிகை, பப்ளிகேசன், கட்டுமான ஆலோசகர் போன்ற தொழில்நல்ல வளர்ச்சியைஅடையும்.

2021 ஏப்ரல் 4-ந்தேதிமுதல் 2021 செப்டம்பர்14-ந்தேதிவரை பணவிரயம் ஆகலாம்.
எனவே யாரையும் நம்பி பணத்தை ஒப்படைக்க வேண்டாம். நமக்கு ஏது எதிரிஎன்றுஅசட்டையாகஇருந்துவிடாதீர்கள். .மறைமுக பகைவர்களால் அவ்வப்போது இடையூறுகள் வரலாம்.எனவே அவர்கள் பக்கம் ஒருகண் இருப்பது நல்லது.

கலைஞர்கள்: கலைஞர்களுக்கு பணவரவு சிறப்பாக இருக்கும். புகழ், பாராட்டு கிடைக்கும்.
புதிய ஒப்பந்தம் தாராளமாக வரும். அரசியல்வாதிகள், சமூக நலசேவகர்கள் நற்பெயரும், புகழும் கிடைக்கப்பெறுவர். இதுவரை இருந்து வந்ததடை, தோல்வி இனிஇருக்காது. ஏப்ரல் 4-ந்தேதி முதல் செப்டம்பர்14-ந்தேதிவரை பிரதி பலனை எதிர்பாராமல் உழைக்கவேண்டியது இருக்கும். வீண் அலைச்சல் ஏற்படும். அரசியல்வாதிகள்பொது நலதொண்டர்களுக்கு எதிர்பார்த்த பதவி கிடைக்கும்

மாணவர்கள்: கல்வியில் நல்ல வளத்தை காணலாம். ஆசிரியர்களின்ஆலோசனை கிடைக்கும். விரும்பிய பாடம் கிடைக்கும். காலர்ஷிப் போன்றவை கிடைக்கும்.2021 ஏப்ரல் 4-ந்தேதிமுதல் 2021 செப்டம்பர்14-ந்தேதி வரை சிரத்தைஎடுத்து படிக்க வேண்டியதிருக்கும்.

விவசாயம்: மொச்சை, கடலை, கேழ்வரகு, நெல், மஞ்சள், சோளம்,தக்காளி போன்ற பயிர்கள் மூலம் அதிகலாபத்தை காண்பர். புதிய சொத்து வாங்கும் வண்ணம் கைகூடும். நவீன இயந்திரங்கள் வாங்க வாய்ப்புஉண்டு. வழக்கு விவகாரங்கள் சாதகமாகஇருக்கும்.
தீர்ப்பு உங்கள் பக்கம்அமையலாம். 2021 ஏப்ரல் 4-ந்தேதிமுதல் 2021 செப்டம்பர் 14-ந்தேதி வரை பசு வளர்ப்பவர்கள்அதில்அதிகஅக்கறைகாட்டவேண்டியதிருக்கும்.

பெண்கள்: பெண்களுக்கு தடைபட்டு வந்த திருமணம் நடக்க வாய்ப்பு உண்டு.குழந்தை பாக்கியம் கிடைக்கும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பர்.
உங்களை புரிந்து கொள்ளாமல் இருந்தவர்கள் உங்கள்மேன்மையைஅறிந்து சரணடையும் நிலை வரலாம். குடும்பத்தோடுபுனிதஸ்தலங்களுக்கு சென்று வருவீர்கள். வேலைக்கு செல்லும் பெண்களுக்கு கோரிக்கைகள் நிறைவேறும். பெண்காவலர்களுக்கு புதிய பதவி தேடி வரும்.

பூவியாபாரம் செய்யும் பெண்கள் நல்ல வருமானத்தை பெறுவர்.2021 ஏப்ரல் 4-ந்தேதிமுதல் 2021 செப்டம்பர் 14-ந்தேதி வரைசிற்சில விஷயங்களில் விட்டுகொடுத்து ஆலோசனையை கேட்பது நல்லது.

உடல்நலம்: சிறப்பாக இருக்கும்.ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தவர்கள் வீடு திரும்புவர். பிள்ளைகள் நலம் மேம்படும்.

பரிகாரம்:

ஆதரவற்றமூதாட்டிகளுக்குஉதவிசெய்யுங்கள். 

பாம்புபுற்றுள்ளகோவிலுக்குசென்றுவாருங்கள். 2021 ஏப்ரல் 4-ந்தேதிமுதல் 2021 செப்டம்பர்14-ந்தேதிவரை வியாழக்கிழமை தட்சிணாமூர்த்திக்கு மஞ்சள் நிறமலர் மாலைஅணிவித்து வழிபாடு நடத்துங்கள்

கணித்தவர்: காழியூர் நாராயணன்

No comments:

Post a Comment

பொதுச் செய்திகள்

கல்விச் செய்திகள்

Featured News