Subscribe Us

Sunday, November 15, 2020

அருகம்புல் தரும் நன்மைகள்

அருகம்புல்லை சிறு துண்டுகளாக வெட்டி பசையாக அரைத்து எடுக்கவும். இந்த பசையுடன் மஞ்சள் சேர்த்து நன்றாக கலக்கவும். இதை பூசுவதால் அரிப்பு, சொரி சிரங்கு, படர்தாமரை, வியர்க்குரு சரியாகிறது. தோல் நோய்களுக்கு மருந்தாகும் அருகம்புல், அக்கி கொப்புளங்கள், சொரியாசிஸ்சை குணப்படுத்துகிறது. அருகம்புல்லை கொண்டு கண் நோய்க்கான மருந்து தயாரிக்கலாம்.

உடல் வெப்பத்தை குறைக்கும், வெட்டை நோய்க்கு மருந்தாகிறது. வயிற்று புண்களை ஆற்றும் சிறுநீர் பெருக்கியாக விளங்குகிறது. கை கால் வீக்கத்தை போக்குகிறது. மருந்துகளை அதிகளவில் எடுத்துக் கொள்வதாலும் வெளியில் அடிக்கடி சாப்பிடுவதாலும் ஏற்படும் புண்களை அருகம்புல் சாறு ஆற்றும்.

No comments:

Post a Comment

Popular Feed