Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Sunday, November 8, 2020

நீட் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நாளை தொடக்கம்: பள்ளிக்கல்வித்துறை!

தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் நடத்தப்படும் நீட் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நாளை தொடங்குகிறது.

தமிழக பள்ளிக் கல்வித்துறையின் சார்பாக நீட் தேர்வுக்கான பயிற்சியானது அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. நடப்பு கல்வியாண்டுக்கான இலவச நீட் பயிற்சி வகுப்புகளை, E-Box நிறுவனத்துடன் இணைந்து பள்ளிக்கல்வித்துறை நடத்தவிருக்கிறது.

கடந்த கல்வியாண்டில் தமிழக அரசின் இலவச நீட் பயிற்சி மையங்களில் பயிற்சி பெற்ற 7,000-க்கும் மேற்பட்டோரில் 1,633 பேர் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர். தற்போது அரசின் இலவச நீட் பயிற்சி மையங்களில் சேர இதுவரை 15,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். விண்ணப்பித்துள்ள மாணவர்களுக்கான இலவச நீட் பயிற்சி வகுப்புகள் ஆன்லைன் மூலம் நாளை தொடங்குகிறது.

பயிற்சி வகுப்பில் சேர விண்ணப்பித்துள்ள மாணவர்கள் https://neet.e-box.co.in என்ற இணையதளத்தில் 11-ம் வகுப்பு பதிவு எண், பிறந்த தேதியை உள்ளிட்டு Log In செய்து, பங்கேற்கலாம் என்று கல்வித்துறை அறிவித்துள்ளது. நடப்பு கல்வியாண்டுக்கான நீட் தேர்வு தேதிக்கு முந்தைய வாரம் வரை மாணவர்களுக்கு பயிற்சி வழங்கப்படும் என்றும், ஆன்லைனிலேயே ஒவ்வொரு வார இறுதியிலும், அந்த வாரத்துக்கான பாடங்களில் இருந்து தேர்வு நடத்தப்படும் என்றும் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment