Breaking

Wednesday, November 11, 2020

தமிழகத்திற்கு மிக கனமழை.. ஆரஞ்சு அலர்ட்.. மக்களே உஷார்..!


இன்று முதல் தமிழகத்தில் பல மாவட்டங்களில் தொடர்ந்து 4 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தின் வடகிழக்கு பருவமழை தொடங்கியத்தில் இருந்தே பலத்த மழை பெய்துவருகிறது.

இந்நிலையில், அடுத்த நான்கு நாட்களுக்கு சென்னை உள்ளிட்ட பெரும்பாலான மாவட்டங்களுக்கு கனமழை பெய்யும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. தமிழக கடலோர பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டம் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும்.

சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை போன்ற டெல்டா மாவட்டங்களிலும் புதுச்சேரி மற்றும் காரைக்காலில் மிக கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தின் 14ஆம் தேதி மிக கனமழை வாய்ப்புள்ளதால் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment