JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU
SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி
ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டம் அனைவருக்கும் தரமான கல்வி வழங்குவதை நோக்கமாக கொண்டுள்ளமையால் பள்ளி வசதி இல்லாத குடியிருப்புகளில் உள்ள அனைத்து குழந்தைகளுக்கும் பள்ளி வசதி ஏற்படுத்துதலுக்கு முதல் முன்னுரிமை வழங்கியுள்ளது .
அருகாமைப் பள்ளி விதிகள்:
1. தொடக்க மற்றும் உயர்தொடக்க நிலை தமிழ்நாடு இலவச கட்டாய கல்வி உரிமை விதிகள் 2011 ல் , ஒவ்வொரு குடியிருப்பிலும் 1 கிமீ தொலைவிற்குள் தொடக்கப் பள்ளி வசதியும் , 3 கிமீ தொலைவிற்குள் நடுநிலைப் பள்ளி வசதியும் இருத்தல் வேண்டும் என வரையறுக்கப்பட்டுள்ளது. மேலும் புதிய பள்ளிகள் தொடங்க இயலாத பரவலான மக்கள் தொகை கொண்ட தொலைதூர பள்ளி வசதி இல்லாத குடியிருப்புகள் மற்றும் புதிய பள்ளிகள் தொடங்கிட இடவசதி இல்லாத குடியிருப்புகளில் உள்ள குழந்தைகள் , தெருவோரக் குழந்தைகள் , வீடில்லா குழந்தைகள் மற்றும் பெரியோர் துணை இல்லாத குழந்தைகள் பாதுகாப்பாக பள்ளிக்குச் சென்று போக்குவரத்து பாதுகாவலர் வசதி அல்லது உண்டு உறைவிடப் பள்ளி விடுதி வசதி வழங்கிடவும் இலவச கட்டாயக் கல்வி உரிமை விதிகள் 2011 ல் கூறப்பட்டுள்ளது..
2 . உயர்நிலை மற்றும் மேல்நிலை நிலை - தரம் உயர்த்துதல் தமிழ்நாடு அரசின் அரசாணை நிலை எண் : 235 , பள்ளிக் கல்வி துறை , 24.05.1997 ன்படி நடுநிலைப் பள்ளியை உயர்நிலைப் பள்ளியாகத் தரம் உயர்த்தவும் உயர்நிலை பள்ளிகளை மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தவும் கீழ்க்காணு முன்னுரிமைகள் / தகுதிகளாகக் கருதப்படுகின்றன.
No comments:
Post a Comment