Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Thursday, December 3, 2020

2021 பொதுத் தேர்வுகள் ஆன்லைனில் நடைபெறாது; எழுத்துபூர்வமாகவே நடைபெறும்: சிபிஎஸ்இ

2021 பொதுத் தேர்வுகள் ஆன்லைன் மூலமாக அல்லாமல் எழுத்துபூர்வமாக நடைபெறும் என்று சிபிஎஸ்இ சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் சிபிஎஸ்இ பள்ளிகளில் 10 மற்றும் 12-ம் வகுப்புகளில் படிக்கும் மாணவர்களுக்கான 2020ஆம் ஆண்டு பொதுத் தேர்வுகள் பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் இரண்டு கட்டங்களாக நடைபெறுவதாக இருந்தன. தேர்வுகள் நடைபெற்று வந்த சூழலில் கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக 29 பாடங்களுக்கான தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டன. இந்தத் தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு, அக மதிப்பீட்டின் அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்கப்பட்டன.

தற்போது தொற்றுப் பரவல் அச்சம் காரணமாக வகுப்புகள் அனைத்தும் ஆன்லைன் மூலம் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் 2021ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12 ஆம் வகுப்புப் பொதுத் தேர்வுகள் நடைபெறுமா என்று கேள்வி எழுந்தது

இந்நிலையில் இதுகுறித்து மூத்த சிபிஎஸ்இ அதிகாரி கூறும்போது, ’’பொதுத் தேர்வுகளை நடத்தும் தேதிகள் குறித்து இறுதி முடிவு இதுவரை எடுக்கப்படவில்லை. இதுகுறித்து பள்ளி முதல்வர்கள், அதிகாரிகளுடன் ஆலோசனை நடைபெற்று வருகிறது.

தேர்வுகள் நடைபெற்றால், அவை ஆன்லைன் மூலமாக அல்லாமல் எழுத்துபூர்வமாகவே நடைபெறும். அனைத்து கோவிட் விதிமுறைகளையும் பின்பற்றியே தேர்வுகள் நடைபெறும்.

ஒருவேளை தேர்வுகளுக்கு முன்னால் செய்முறைத் தேர்வுகளை மாணவர்களால் செய்ய முடியாமல் போனால், அதற்கான மாற்று வழி குறித்து முடிவெடுக்கப்படும்’’ என்று தெரிவித்தார்.

No comments:

Post a Comment