Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Saturday, December 26, 2020

நிதி நெருக்கடியில் டெலிகிராம் - 2021 முதல் கட்டணம் விதிக்க முடிவு?

2021 ஆம் ஆண்டில், டெலிகிராம் செயலியில் பயனர்கள் பணம் செலுத்தி பெறக்கூடிய சில புதிய சிறப்பம்சங்கள் சேர்க்கப்படும் என அதன் நிறுவனர் பாவெல் டுரோவ் தெரிவித்துள்ளார் என்கிறது தி இந்து.

இப்போது செயலியை பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் தொடர்ந்து இலவசமாகவே பயன்படுத்தலாம், எந்த கட்டணமும் விதிக்கப்படாது என்று கூறும் டுரோவ், கட்டணம் செலுத்தி பெறும் புதிய சிறப்பம்சங்கள், டெலிகிராம் வழியே வணிக பரிவர்த்தனைகள் செய்பவர்களுக்கும், அதிகளவு டெலிகிராம் பயன்படுத்துபவர்களுக்கும் உதவுவதாக இருக்கும் என்றும் கூறியுள்ளார்.

"ஒருவருக்கு ஒருவர் செய்தி பகிர்ந்து கொள்ளும் வசதிக்கு எந்த கட்டணமும் விதிக்கப்படாது. அடுத்த வருடத்தில் இருந்து டெலிகிராம் செயலி வருமானம் ஈட்ட தொடங்கினால் மட்டுமே, டெலிகிராம் நிறுவனம் தொடர்ந்து இயங்கும்" என்று டுரோவ் கூறியதாக இந்தியா டுடே இணையதளம் வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் அவர், தன்னுடைய தனிப்பட்ட சேமிப்பில் இருந்து டெலிகிராம் நிறுவனத்தின் செலவுகளுக்கு பணம் கொடுத்துள்ளதாகவும், இப்போது இரண்டு பில்லியனுக்கும் மேற்பட்ட பயனர்கள் டெலிகிராமை பயன்படுத்துவதால், அதற்கு போதுமான நிதியுதவி வேண்டும் எனவும் டுரோவ் கூறியுள்ளார்.

துபாயை சேர்ந்த சமூக இணையமான டெலிகிராமில், புதிதாக விளம்பரங்கள் வெளியிடும் வசதி இணைக்கப்படும் எனவும், அதன் வழி செயலியில் சேனல்கள் நடத்துபவர்கள் வருவாய் ஈட்ட முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கூடுதல் பாவனைகளுடன் ப்ரீமியம் ஸ்டிக்கர்களை செயலியில் அறிமுகம் செய்வதன் வழியே, அந்த ஸ்டிக்கர்களை வடிவமைக்கும் கலைஞர்களுக்கும் லாபம் கிடைக்கும் என டுரோவ் குறிப்பிட்டுள்ளார்.

ஓடிடி தளங்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டிருக்கையில், மாத சந்தா செலுத்தாமல் சர்வதேச திரைப்படங்களையும், படைப்புகளையும் எங்கிருந்து வேண்டுமானாலும் இலவசமாக பெறும் வசதியை டெலிகிராம் செயலி அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

No comments:

Post a Comment