JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU
SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள குள்ளம்பாளையத்தில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது, தமிழக சட்டமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் அல்லது மே மாதம் நடைபெற உள்ளது. தமிழகத்தில் அரையாண்டு தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. தனியார் பள்ளிகள் விருப்பப்பட்டால் ஆன்லைன் மூலம் மாணவர்களுக்கு தேர்வு கொள்ளலாம்.
தமிழகத்தில் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் அரசு பள்ளி மாணவ-மாணவிகள் 405 பேருக்கு மருத்துவம் படிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. தமிழகத்தில் அடுத்த பதினொரு புதிய மருத்துவ கல்லூரிகள் தொடங்க உள்ளதால் மாணவர்களுக்கு கூடுதலாக மருத்துவ படிக்க இடம் கிடைக்கும்.
பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்புக்கு பொதுத்தேர்வு நடத்தப்படுமா.? என்று செய்தியாளர் அமைச்சர் செங்கோட்டையன் இடம் கேள்வி எழுப்பினார். அதற்கு அவர், இது குறித்து முதலமைச்சரிடம் கலந்து ஆலோசித்து உரிய நடவடிக்கை எடுக்கபடும் என தெரிவித்தார்.
No comments:
Post a Comment