Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Tuesday, December 22, 2020

ஜெஇஇ தேர்வு புதிய நடைமுறை விதிகள்: தேர்வு முகமை வெளியிட்டது

ஜெஇஇ தேர்வுக்கான புதிய விதிமுறைகளை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது. ஜெஇஇ தேர்வு விதிமுறைகளின்படி, 2019ம் ஆண்டு வரை தேர்வில் தேர்ச்சி பெறவில்லை என்றால், அவர்கள் அடுத்த தேர்வு எழுதலாம் அடுத்த வாய்ப்பு கிடையாது. ஆனால் தற்போது தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ள விதிகளின்படி, ஒரு ஆண்டில் நான்கு முறை ஜெஇஇ தேர்வுகளை எழுத முடியும். 

அதே நேரத்தில் கடந்த 2019ம் ஆண்டில் ஜெஇஇ முதன்மை தேர்வு அல்லது ஜெஇஇ அட்வான்ஸ் தேர்வுகளை எழுதியவர்கள் 2021ம் ஆண்டில் நடக்க உள்ள ஜெஇஇ தேர்வுகைள எழுத அனுமதியில்லை. அதாவது ஜெஇஇ அட்வான்ஸ் தேர்வுகளில் தேர்ச்சி பெறாதவர்கள் ஒரு ஆண்டில் இரண்டு தேர்வுகளை மட்டுமே எழுத முடியும்.

தற்போது வெளியிடப்பட்டுள்ள புதிய விதிகளின் படிமேற்கண்ட, ஒரு ஆண்டில் நான்குமுறை தேர்வு எழுத முடியும். அதாவது பிப்ரவரி, மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் நடத்தப்படும் தேர்வுகளில் பங்கேற்க முடியும். இந்த நான்கு தேர்வுகளில் பங்கு பெறும் நபர்கள் தாங்கள் நான்கு தேர்வுகளில் பெற்ற மதிப்பெண்களில், அதிகம் பெற்ற இரண்டு தேர்வுகளின் மதிப்பெண்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டு இறுதி தகுதிக்கு எடுத்துக் கொள்ளப்படும். 

வரும் 2021ம் ஆண்டிப் பிப்ரவரி மாதம் நடக்கும் ஜெஇஇ முதற்கட்டத் தேர்வு பிப்ரவரி 23ம் தேதி முதல் 26ம் தேதி வரை நடக்கும். அதில், பிஇ, பிடெக் படித்தவர்கள் பங்கேற்கலாம். அதற்கு பிறகு அவர்களின் செயல்பாடுகளின் அடிப்படையில் ஜெஇஇ அட்வான்ஸ் தேர்வுக்கு எடுத்துக் கொள்ளப்படுவார்கள்.

No comments:

Post a Comment