Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Tuesday, December 22, 2020

மூட்டு வலியை விரட்டியடிக்கும் எருக்கம் இலை!

வயதான முதியவர்கள மூட்டு வலியாலும், நீரிழிவு நோயாலும் அவதிப்பட்டு வருகிறார்கள். முதியவர்கள் மட்டுமல்லாமல், இள வயதினரும் கால் வலி, பாத வலி என்று ஓயாத உழைப்பினால் இது போன்ற வலிகளை அனுபவித்து வருகிறார்கள்.

இந்த வழியை எல்லாம் போக்க ஒரே ஒரு அற்புதமான இலை மட்டுமே போதும் என்று சொன்னால் நம்புவீர்களா? ஆனால் நம்பித்தான் ஆக வேண்டும். இது நம் முன்னோர்கள் காலம் காலமாக பயன்படுத்தி வந்த ஒரு நடைமுறை மருத்துவ முறை தான் அவை..

இது ஒரு மூலிகை இலையால் செய்யப்படும் ஒரு மருத்துவ முறையாகும். இந்த மூலிகை இப்பொழுதும் கூட நம் வீட்டின் அருகாமையில் எங்காவது இருக்கும் சாதாரண ஒரு செடி வகையாக தான் இருக்கிறது.

அது தான் எருக்கஞ்செடி. அந்த செடியின் இலையை தான் இப்போது நாம் பயன்படுத்த இருக்கிறோம். எருக்கன் செடி இலையில் பாத வலி, கால் வலி போன்றவற்றை நீக்குவதற்கான ஆற்றல் உள்ளது.

அதை எப்படிப் பயன்படுத்த வேண்டும்? என்பதில் தான் சூட்சமம் இருக்கிறது. நீரிழிவு நோயாளிகளுக்கு பாதத்தில் நீர் வடிதல் பிரச்சனை இருக்கும். தீவிரமான இந்தப் பிரச்சினைக்கு கூட ஒரே ஒரு எருக்கன் செடியின் இலையை போதும்.

எருக்கன் செடியின் இலைகளை பறித்து வந்து வைத்துக் கொள்ளுங்கள். உங்களுடைய காலணிகளுக்கு இடையில் இந்த செடியின் இலையை வைத்து விடுங்கள்.

நீங்கள் நடக்கும் பொழுது அந்த இலையின் மீது காலை வைத்து காலணியை போட்டுக் கொண்டே நடக்க வேண்டும். தொடர்ந்து ஒரு வாரம் இப்படி நடந்து பாருங்கள்.

இந்த வலிகளையெல்லாம் காணாமலேயே போய்விடும். இதனை பலரும்இன்றும் கிராமத்தில் செய்து கொண்டிருக்கின்றனர்.

No comments:

Post a Comment