Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Wednesday, December 23, 2020

ஜன., பிப்., -இல் தேர்வுகள் நடத்துவதற்கு வாய்ப்பு இல்லை, ஆன்லைன் தேர்வுக்கு சாத்தியமே இல்லை: மத்தியக் கல்வி அமைச்சர் உறுதி

'சி.பி.எஸ்.இ., எனப்படும், மத்திய இடைநிலை கல்வி வாரியம் நடத்தும், 10 மற்றும் பிளஸ் 2 தேர்வுகள், ஜன., - பிப்.,ல் இருக்காது' என, மத்திய கல்வி அமைச்சர், ரமேஷ் பொக்ரியால் கூறியுள்ளார்.கொரோனாவால் மூடப்பட்டுள்ள பள்ளிகளை திறப்பது குறித்தும், ஆண்டு தேர்வுகளை நடத்துவது குறித்தும், மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால், நேற்று ஆய்வு செய்தார். 

'வீடியோ கான்பரன்ஸ்' முறையில், நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த, ஆசிரியர்கள், மாணவர்கள், கல்வியாளர்களுடன், அவர் ஆலோசனை நடத்தினார்;அப்போது, கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்: வழக்கமாக, 10 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கு, 'பிராக்டிகல்' எனப்படும் செய்முறை தேர்வுகள், ஜனவரி மாதத்திலும், ஆண்டு இறுதித் தேர்வு, பிப்., மாதத்திலும் துவங்கும். 

தற்போதுள்ள சூழ்நிலையில், 2021, ஜன., - பிப்.,ல் தேர்வுகள் நடத்துவதற்கு வாய்ப்பு இல்லை.மார்ச்சில் நடத்துவது குறித்து விவாதித்து முடிவு எடுக்கப்படும்.

அனைத்து மாணவர்களுக்கும், உரிய தொழில்நுட்ப வசதி இல்லாததால், ஆன்லைன் மூலமாக தேர்வுகள் நடத்துவதற்கு வாய்ப்பே இல்லை. நேரடி முறையில்தான் தேர்வு நடத்தப்படும். இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment