Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Saturday, December 26, 2020

இந்த கல்வியாண்டில் பள்ளிகளுக்கு பொது தேர்வு நடத்தப்படுமா? அமைச்சர் செங்கோட்டையன் பதில்

பள்ளிகளில் அடுத்தாண்டு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவது குறித்து அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம் அளித்துள்ளார். 

 கோபி அருகே உள்ள குள்ளம்பாளையத்தில் அரசின் மினி கிளினிக் திறப்பு விழா நேற்று நடந்தது. அமைச்சர் செங்கோட்டையன் திறந்து வைத்தார். 

அதன்பின், அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

வெளிநாடுகளில் இருந்து புதிய வகை வைரஸ் வருவதாக கூறினாலும், கோயில்கள் திறக்கப்பட்டு வழிபாடு நடத்த அரசு அனுமதித்துள்ளது.

தமிழக அரசின் காலம் மே 24ம் தேதி முடிவடைவதால் அதற்கு முன் பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுமா? என்பது குறித்து முதல் அமைச்சரிடம் கலந்து நல்ல முடிவு செய்யப்படும். 

கொரோனா தொற்று ஏற்பட்டதாலும், ஊரடங்கு காரணமாகவும் கடந்த ஆண்டு காலாண்டு, அரையாண்டு தேர்வை வைத்து தேர்ச்சி அறிவிக்கப்பட்டது. இந்தாண்டு நிலைமை வேறு. 

நடப்பாண்டில் 11 புதிய மருத்துவ கல்லூரிகள் கொண்டு வரப்பட்டதால் அரசு பள்ளி மாணவர்களுக்கு கூடுதல் இடம் கிடைக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment