JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU
SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி
தமிழகத்தில் உள்ள ஏழை, எளிய மாணவர்கள் நலன் கருதி, ஜே.இ.இ. தேர்வுகளுக்கு தமிழக அரசு சார்பில் வரும் ஜனவரி மாதம் 4 -ம் தேதி முதல் இலவச பயிற்சி வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கிராமப்புறங்களில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர், நீட் தேர்வை எதிர்கொள்ளும் வகையில் கடந்த, 2017 - ம் ஆண்டு முதல் தமிழக அரசு சார்பில் இலவச பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. இதில் ஏராளமான மாணவர்கள் பயன்பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், மத்திய அரசின் தொழில்நுட்ப உயர்கல்வி நிறுவனங்களான ஐ.ஐ.டி. மற்றும் என்.ஐ.டி ஆகியவற்றில், சேர்ந்து பயில ஜே.இ.இ. கட்டாயம் எழுத வேண்டும். அவ்வாறு ஜே.இ.இ. தேர்வு எழுத விரும்பும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு, கணிதம், இயற்பியல் மற்றும் வேதியியல் பாடங்களில், இந்த ஆண்டு முதல் இலவச பயிற்சி அளிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
இதற்காக நெக்ஸ்ட் ஜென் வித்யா என்ற தனியார் நிறுவனத்துடன், தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. ஜே.இ.இ.பயிற்சியில் சேர விரும்பும் மாணவர்கள் https://play.google.com/store/apps/details?id=com.vidhyaeduation.android/U/B என்ற இணையதளம் வாயிலாக வரும் 31 -ம் தேதி வரை இலவசமாக பதிவு செய்து கொள்ளலாம் என்றும், அடுத்த ஆண்டு அதாவது வரும் ஜனவரி 4 -ம் தேதி முதல் ஜே.இ.இ. பயிற்சி வகுப்புகள் துவங்க உள்ளது.
No comments:
Post a Comment