JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU
SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி
மாணவர்களுக்குப் போட்டித் தேர்வுகள் குறித்துப் பயிற்சி அளிக்க முன் அனுபவம் கொண்ட பாட வல்லுநர்கள் தேவை என்று வேலைவாய்ப்புத் துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை இயக்குநர் வீரராகவ ராவ் ஐஏஎஸ் சார்பில் இன்று வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு:
''சென்னை, கிண்டியில் இயங்கி வரும் மாநிலத் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் குரூப்-1, குரூப்-2 தேர்வுகள் மற்றும் வங்கித் தேர்வுகள் உள்ளிட்ட பல்வேறு முகமைகள் நடத்தும் போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்குக் கட்டணமில்லாப் பயிற்சி வகுப்புகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன.
இப்பயிற்சி வகுப்புகளில் மாணவர்களுக்கு, பாடக் குறிப்புகள் மற்றும் மாதிரித் தேர்வுகள் வழங்கப்படுகின்றன. நேரடி மற்றும் இணைய வழியில் நடைபெறும் இவ்வகுப்புகளைச் சிறந்த முறையில் நடத்த, உரிய கல்வித் தகுதி மற்றும் போட்டித் தேர்வு வகுப்புகளில் முன் அனுபவம் கொண்ட பாட வல்லுநர்கள் தேவை.
அத்தகைய பாட வல்லுநர்கள், தங்கள் சுய விவரக் குறிப்புகளை statecareercentre@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்''.
இவ்வாறு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment