JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU
SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி
இடைநிலை ஆசிரியர்களுக்கு ஓர் மகிழ்ச்சியான செய்திநமது நீண்ட நாள் கோரிக்கையான "சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும்" என்ற வரலாற்று சிறப்புமிக்க கோரிக்கைக்கு நீதிமன்றம் மூலம் விரைவில் தீர்வு காண ஒரு வாய்ப்பு...
நம்மைப் போலவே வேளாண்மை துறையில் 01.06.2009 க்கு முன் தேர்வு செய்யப்பட்ட சிலர் 01.06.2009 க்கு முன்னர் பணியில் சேர்ந்தனர். சிலர் 01.06.2009 க்கு பின்னர் பணியில் சேர்ந்தனர். அவர்களுக்கு 1.86 ஆல் பெருக்கி வழங்க வேண்டும் என்ற
கோரிக்கையை அரசு மறுத்துவிட்டது.அதனை ஏற்காமல் பாதிக்கப்பட்ட நபர்கள் 2014 ஆம் ஆண்டு மதுரை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். அந்த வழக்கின் தீர்ப்பில் "வழக்கு தொடுத்த 70 நபர்களுக்கு மட்டும் 1.86 வழங்கப்பட வேண்டுமென்று தீர்ப்பு" ஆணையிட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவை அடுத்து வேளாண்மை துறை தற்போது வழக்கு தொடுத்த 70 அலுவலர்களுக்கு மட்டும் 1.86 வழங்க செயல்முறைகள் நிதித்துறை ஒப்புதலோடு நிறைவேற்றியுள்ளது.
FSE1/88389/013 dated 11.01.2021
இதே போன்றுதான் 2009 இநிஆசிரிய நியமனமும். 2009 ஜூனுக்கு முன்னர் தேர்வு செய்யப்பட்டு 01.06.2009க்கு பின்னர் நியமிக்கப்பட்ட வர்கள் இந்த வழக்கின் தீர்ப்பை மேற்கோள்காட்டி நமது வழக்கிலும் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் மிக மிக அதிகமாக உள்ளது.
விரைவில் 2014ல் வழக்கு தொடுக்கப்பட்ட 774 நபர்களுக்கு நியாயமான தீர்ப்பு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வழக்குடன் 2017 & 2018ல் தொடுக்கப்பட்ட அனைத்து வழக்கையும் விரைந்து முடித்து அனைவருக்கும் "சம வேலைக்கு" "சம ஊதியம்"என்ற நமது கோரிக்கையை நிறைவேற்றுவதற்கான மேலும் ஒரு மைல்கல்லாக இந்த அரசு கடிதம் நமக்கு கிடைத்துள்ளது.(உச்சநீதிமன்றம் பல வழக்குகளில் "சம வேலைக்கு" "சம ஊதியம்" வழங்க வேண்டும் என பல்வேறு வழக்குகளில் மேற்கோள் காட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.)
பிறந்துள்ள இந்தப் புத்தாண்டில் நம் கோரிக்கையை கண்டிப்பாக வென்றெடுப்பதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் தென்படுகின்றன.... விரைவில் வெற்றியை அனைவரும் காண்போம்.
உண்மையாக (இரத்தம்) கண்ணீர் சிந்திய போராட்டம் வென்று காட்டுவது நிச்சயம்.
வெற்றி என்பதும் எளிதல்ல அதை விட்டுவிடு எண்ணமும் நமக்கு அல்ல.
மாநில தலைமை
2009&TET போராட்டக்குழு
CLICK HERE TO DOWNLOAD
No comments:
Post a Comment