JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU
SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி
வருகிற பிப்ரவரி 8-ஆம் தேதி முதல் 9 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பள்ளிகளைத் திறக்க தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.
தமிழகத்தில் பிப்ரவரி 28 ஆம் தேதி வரை தளர்வுகளுடன் பொது முடக்கத்தை நீட்டித்து அரசு உத்தரவிட்டுள்ளது. வருகிற 8 ஆம் தேதி முதல் 9 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்காக பள்ளிகளைத் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதேபோல, தமிழகத்தில் உள்ள இளநிலை, முதுநிலை படிப்புகளுக்கான அனைத்து வகுப்புகளையும் வருகிற 8 ஆம் தேதி முதல் தொடங்குவதற்கு அரசு அனுமதி அளித்துள்ளது.
அனைத்து திரையரங்குகளிலும் நாளை முதல் 100% இருக்கைகளை பயன்படுத்தி செயல்படவும் அனுமதிக்கப்பட்டுள்ளது. பெட்ரோல் பங்குகள், இரவு பத்து மணிவரை மட்டுமே செயல்பட அனுமதி அளிக்கப்பட்டிருந்த நிலையில், இப்போது நேரக்கட்டுப்பாடின்றி இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அரசு அறிவித்துள்ள நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி, நீச்சல் குளங்கள், கண்காட்சிக் கூடங்கள் செயல்படவும் அனைத்து மக்கள் குறைதீர்க்கும் நாள் போன்ற பொதுமக்கள் சார்பான நிகழ்ச்சிகளை நடத்தவும் அரசு அனுமதித்துள்ளது.
அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி ராமேஸ்வரத்தில் தீர்த்தமாடுதலுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. விளையாட்டுப் போட்டிகளில் 50 சதவீத பார்வையாளர்களை அனுமதிக்கலாம் எனவும் தமிழக அரசு அறிவித்துள்ளது
No comments:
Post a Comment