JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU
SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி
அரசு ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகள், தி.மு.க., ஆட்சியில் நிறைவேற்றப்படும்' என, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
அவரது அறிக்கை:
'பங்களிப்புடன் கூடிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து விட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டு வர வேண்டும்' என்பது உட்பட, ஒன்பது கோரிக்கைகளை முன்வைத்து போராடிய, 'ஜாக்டோ - ஜியோ' அமைப்பைச் சேர்ந்த ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மீது எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டும்.
நியாயமான கோரிக்கைகளுக்காக நடத்தப்பட்ட, ஜாக்டோ - ஜியோ அமைப்பினரின் போராட்டத்தை கொச்சைப்படுத்திய அ.தி.மு.க., ஆட்சி, 5,068 ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு, குற்றக் குறிப்பாணைகள் வழங்கி, பெரும் இன்னலுக்கு உள்ளாக்குவது கண்டனத்துக்குரியது.மக்களின் பேராதவுடன், தி.மு.க., ஆட்சி அமைந்ததும், அவர்களின் நியாயமான கோரிக்கைகள் அனைத்தையும், நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு, ஸ்டாலின் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment