Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Friday, January 1, 2021

செரிமான சக்தியை அதிகரிக்கும் உணவுகள்


சீரக தண்ணீர் செரிமான மேம்படுத்துவதோடு, செரிமான பிரச்சனைகளான வாய்வுத் தொல்லை, வயிற்று உப்புசம், வயிற்றுப் போக்கு, குமட்டல் போன்றவற்றில் இருந்தும் நிவாரணம் அளிக்கும். 

சீரகம் கணையத்தில் நொதிகளின் உற்பத்தியைத் தூண்டி, செரிமானம் சிறப்பாக நடைபெற உதவும்.

இரவில் தூக்கம் வராமல் அவஸ்தைப்படுபவர்களா நீங்கள்? அப்படியெனில் சீரகத் தண்ணீர் அதற்கு நல்ல தீர்வை வழங்கும். சாதாரணமாக தூக்க பிரச்சனை இருப்பவர்கள், இரவில் சீரக நீரைக் குடிப்பதோடு, ஒரு வாழைப்பழத்தையும் சாப்பிட்டு வந்தால், இரவில் நல்ல நிம்மதியான ஆழ்ந்த தூக்கத்தைப் பெறலாம்.

சீரகம் டாக்ஸின்களை உடலில் இருந்து வெளியேற்றி, உடலின் மெட்டபாலிச அளவை அதிகரிக்கும். மேலும் சிறுநீரகங்களின் ஆரோக்கியத்தை சீரக தண்ணீர் மேம்படுத்தும். அதுவும் சீரக நீர் சிறுநீரகங்களின் வலிமையைப் பராமரிப்பதில் பெரிதுவும் உதவியாக இருக்கும்.

No comments:

Post a Comment