கொரோனா தடுப்பூசியால் யாருக்கும் பக்கவிளைவுகள் இல்லை- அமைச்சர் விஜயபாஸ்கர்

கொரோனா தடுப்பூசி போடப்பட்ட யாருக்கும் எந்த ஒரு சிறு பக்க விளைவும் ஏற்படவில்லை என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "இன்று 166 மையங்களில் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தடுப்பு மருந்துகள் போடப்பட்டவர்களுக்கு இதுவரை எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. 

நாளையில் இருந்து முழுமையாக தடுப்பு மருந்துகள் அளிக்கப்படும். முன் களத்தில் பணியாற்றும் பணியாளர்கள் தடுப்பு மருந்து செலுத்தி கொள்வதில் எந்தவித தயக்கமும் காட்டவில்லை

தடுப்பு மருந்து செலுத்திக்கொண்டவர்களுக்கு எந்தவித சிறு விளைவுகளும் ஏற்பட வில்லை, தடுப்பு மருந்து போட்டு கொள்வது குறித்து பொதுமக்கள் அச்சம் கொள்ள வேண்டும். எங்களுக்கு அனுமதி வழங்கினால் நாங்கள் எப்போது வேண்டுமானாலும் இந்தத் தடுப்பு மருந்து போட்டுக் கொள்வோம். 

தடுப்பு மருந்து போட்டுக் கொண்டவர்கள் 30 நிமிடம் கண்காணிப்பில் இருப்பதால் எந்த வித தாமதமும் ஏற்படாது. கொரோனா தடுப்பு நடவடிக்கையில் தமிழகஅரசு முன்னுதாரணமாக விளங்குகிறது என்று பாரதப் பிரதமர் மற்றும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் பாராட்டு தெரிவித்துள்ளனர்" எனக் கூறினார்.
Share:

No comments:

Post a Comment

Total Pageviews

Categories

Thamizhkadal WhatsApp Channel