Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Saturday, January 16, 2021

இந்தியாவில், முதல் கொரோனா தடுப்பூசி போட்டு கொண்ட தூய்மை பணியாளர்

இந்தியாவில், கொரோனா தடுப்பூசி போடும் பணியை பிரதமர் மோடி, வீடியோ கான்பரன்சிங் முறையில் இன்று(ஜன.,16) துவக்கி வைத்தார்.இதனை தொடர்ந்து, டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் நடந்த நிகழ்ச்சியில், அங்கு தூய்மை பணியாளராக பணியாற்றும் மணிஷ் குமார் என்பவருக்கு, இந்தியாவிலேயே முதலாவதாக கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. 

இவருக்கு தொடர்ந்து சுகாதார பணியளர் தவல் திவேதிக்கும் தொடர்ந்து, எய்ம்ஸ் இயக்குநர் ரன்தீப் குலேரியா, நிடி ஆயோக் உறுப்பினர் விகே பால் ஆகியோரும் தடுப்பூசி போட்டு கொண்டனர்.தடுப்பூசி போட்டு கொண்ட பின்னர், மணிஷ் குமார் கூறுகையில், முதலாவதாக தடுப்பூசி போட்டு கொண்டது மகிழ்ச்சி அளிக்கிறது. 

தடுப்பூசியை போடுவதில் எனக்கு எந்த தயக்கமும் இல்லை. மக்கள் யாரும் கவலைப்பட வேண்டாம். தடுப்பூசி பற்றி எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. மக்கள் அனைவரும் தடுப்பூசி போட்டு கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் கூறியதாவது: கொரோனாவுக்கு எதிரான இந்த போரில், தடுப்பூசியானது நமக்கு கிடைத்த சஞ்சிவினியாக உள்ளது.

போலயோவுக்கு எதிரான போரில் நாம் ஏற்கனவே வெற்றி பெற்றுள்ளோம். தற்போது, கொரோனாவுக்கு எதிரான போரில் வெற்றிப்படிக்கட்டை எட்டியுள்ளோம். இந்த நாளில் முன்கள பணியாளர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment