குதிரைவாலியை தினமும் சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்கும். செரிமான பிரச்சனைகள், ரத்தசோகை நோய் உள்ளிடவற்றை குணப்படுத்துகிறது. கண் சம்பந்தமான பிரச்சனைகளை சரி செய்யும் 'பீட்டா கரோட்டின்', இதில் அதிகமாக உள்ளது.
இது ஆண்டி ஆக்சிடன்ட் ஆகவும் வேலை செய்கிறது. ஊட்டச்சத்துகள் மிகுந்த குதிரைவாலி அரிசியில் நார்ச்சத்து மற்றும் இரும்பு சத்து அதிகளவு உள்ளது. இது உடலில் ஏற்படும் மலச்சிக்கலை தடுப்பதிலும், கொழுப்பின் அளவை குறைப்பதிலும் உதவுகிறது.
செரிமானத்தின் போது ரத்தத்தில் இருந்து குளுக்கோஸ் அளவை மெதுவாக வெளியிடுவதற்கும் உதவுகிறது. இதய நோயாளிகள் மற்றும் சர்க்கரை நோயாளிகளுக்கு நல்ல உணவாகப் பயன்படுகிறது.






No comments:
Post a Comment