Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Monday, January 18, 2021

பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கு சுகாதாரத்துறை சார்பில் மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும்! - பள்ளி கல்வித்துறை இயக்குநர்

பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கு சுகாதாரத்துறை சார்பில் மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும் என்று பள்ளி கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் தெரிவித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நாளை பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. இந்நிலையில் சென்னை ஷெனாய் நகரில் உள்ள திரு.வி.க மேல்நிலைப்பள்ளியில் மேற்கொள்ளப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்து பள்ளி கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், நாளை பள்ளிகள் திறக்கப்படுவதை முன்னிட்டு, கடந்த 2 தினங்களாக பள்ளி வளாகங்கள், வகுப்பறைகள் மற்றும் கழிவறைகள் உள்ளிட்ட பகுதிகளை தூய்மைப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன என்றார்.

மேலும் மாணவர்களுக்கு சுகாதாரத்துறை சார்பில், மல்டி விட்டமின் மற்றும் ஜிங்க் மாத்திரைகள் வழங்கவும் எற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், பள்ளிகள் திறந்து ஒரு வாரத்திற்குப் பிறகு, மாணவர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment