Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Monday, January 18, 2021

பாடத் திட்டத்தை குறைத்த தமிழக அரசு.. எந்தெந்த வகுப்பு மாணவர்களுக்கு தெரியுமா..?

கொரோனா காரணமாக உலகம் முழுவதுமாக இயல்பு வாழ்க்கை பாதித்த நிலையில் மாணவர்களும் பள்ளிக்கு செல்ல முடியாமல் ஆன்லைன் வழியாக கல்விகற்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர். பல இன்னல்களுக்கு நடுவே ஆன்லைன் வகுப்பு நடந்து வந்த நிலையில் தற்போது முழு ஆண்டு தேர்வு நேரம் நெருங்கிவிட்ட காரணத்தால் பெற்றோர்களிடம் கருத்து கேட்கப்பட்டு நாளை முதல் (19.01.2020) 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

மேலும் பள்ளிகள் திறக்கப்பட்ட முதல் இரண்டு நாட்களுக்கு பாடங்கள் எதுவும் நடத்தக்கக்கூடாது என்றும் அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் தேர்வுக்கு இன்னும் சில நாட்களே உள்ளதால் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 40 சதவீத பாடத் திட்டத்தை குறைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. மேலும் குறைக்கப்பட்டுள்ள பாடத்திட்டத்தை https://www.thamizhkadal.com/ என்ற இணையத்தின் மூலமாக தெரிந்துகொள்ளலாம்.

குறைக்கப்பட்ட புதிய பாடத்திட்டத்தின் விவரம் 19 தேதி பள்ளி சென்றதும் மாணவர்களுக்கு தரப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பாடத்திட்டத்தில் இருந்து 40 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளதால் மாணவர்களுக்கு தேர்வில் மதிப்பெண் எடுப்பதில் சிக்கல் இருக்காது என்பதால், மாணவர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

12th Reduced Syllabus All Subject - 2020 - 2021

10TH STD 2020 - 2021 குறைக்கப்பட்ட புதிய பாடத்திட்டம்

No comments:

Post a Comment